search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டம் - போலீசார்
    X

    இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டம் - போலீசார்

    இந்துத்வ வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த அமைப்பு புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். #SanatanSanstha #ATS
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள நல சோபாரா என்ற பகுதியில் இருந்து இம்மாத தொடக்கத்தில் சனாதன் சஸ்தா அமைப்பை சேர்ந்த வைபவ் ராவத், ஷரத் கலாஸ்கர், சுதான்வ கோந்தலேகர், ஷ்ரீகாந்த் பன்கர்கார், அவினாஷ் பவார் ஆகிய 5 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

    இதில், வைபவ் ராவத் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், புனேவில் கடந்த ஆண்டு நடந்த இசைநிகழ்ச்சியில் சுதான்வ கோந்தலேகர், வைபவ் ராவத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இந்துத்துவத்தை எதிர்க்கும் தனி நபர் பிரபலங்களை கொல்லவும் அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
    Next Story
    ×