என் மலர்
நீங்கள் தேடியது "terrorist"
- ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
- இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது. இவன் கடந்த ஜனவரி 1-ந் தேதி காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்ரி கிராமத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.
தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதி ரியாஸ் அகமதுவை இந்தியா தீவிரமாக தேடி வந்தது.
இந்நிலையில் தீவிரவாதி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. தீவிரவாதி ரியாஸ் அகமது முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா முகாமில் செயல்பட்டான். சமீபத்தில் ராவல் கோட்டில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான். மேலும் அந்த அமைப்பின் நிதியையும் கவனித்து வந்துள்ளான்.
இந்த ஆண்டில் எல்லைக்கு வெளியே இருந்து செயல்படும் உயர்மட்ட பயங்கரவாத தளபதி கொல்லப்பட்ட 4-வது சம்பவம் இதுவாகும்.
- பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
- பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் புல்வா மா மாவட்டத்தில் அடர்ந்த வனபகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் லாரோவ்-பரிகம் சாலையில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பாதுகாப்பு படையினர் சரண் அடைய எச்சரித்தனர்.
ஆனால் தீவிரவாதிகள் அதை ஏற்க மறுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இன்று காலை துப்பாக்கி சண்டை ஓய்ந்தது. அதன் பிறகு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதி என்று தெரியவந்தது. இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
- ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
புதால் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் மற்றும் ராணுவம் நடத்திய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது என்கவுன்டர் நடந்துள்ளது.
முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜம்முவில் என்கவுன்டர் நடந்து வருவதாக தெரிவித்த, ஏ.டி.ஜி.பி, " இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.
- காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
- அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
- என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.
இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
- போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு- காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மரூப் நாசீர், சகீத் சவுகத் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர்கள் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து வந்தனர். இந்த இருவரையும் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பிடித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகளும் தப்பியுள்ளனர். போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
- கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
- சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
- அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.
அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.
- பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் காஷ்மீரில் சிட்ரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் காரில் ஊடுருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் ஒரு வாகனத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
பயங்கரவாதிகளை உயிருடன் பிடிக்க பாதுகாப்பு படையினர் முதலில் முயற்சி செய்தனர். ஆனால் பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 8.30 மணி அளவில் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சுடுவது நின்றது.
அதன்பிறகு அந்த வாகனத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
- டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள்.
அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.
அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.