என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல்.
    • பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் கொலை குற்றவாளிக்கு அங்குள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த 10 மாதங்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல் என்பவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

    இதையடுத்து மங்கலுக்கு பொதுவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மூலம் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றி உள்ளனர்.

    மரண தண்டனையை நிறைவேற்றும்போது யாரும் வீடியோ கேமரா வசதி செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலர் மரண தண்டனையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.

    • 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
    • நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் பைசாபாத் அருகே இன்று காலை 7.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    • ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
    • இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

    ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. 

    • பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது.
    • கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    காபூல்:

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதற்கிடையே, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கம் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக, ஆப்கானிஸ்தான் மந்திரி நூருல்லா நூரி கூறியதாவது:

    ஆப்கானியர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன்.

    போர் வெடித்தால் ஆப்கானிஸ்தானின் மூத்த குடி மக்களும் இளைஞர்களும் போராடத் தயாராக இருப்பார்கள்.

    பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தனது நாட்டின் தொழில்நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

    ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள் தோல்வியில் முடிந்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலைவிதிகளில் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • நள்ளிரவு 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.
    • 5.20 லட்சம் மக்கள் வசிக்கும் முக்கிய நகரின் அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மஸார்-இ-ஷெரிஃபில் 5.2 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. கடுமையான அதிர்வால் மக்களில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இரவு நேரம் என்பதால், சிலரால் வெளியேற முடிவில்லை.

    இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 320 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தில் ப்ளூ என்ற 15ஆம் நூற்றாண்டின் மசூதி சேதம் அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதியில் மின்தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கடும் சேதம் ஏற்படுவதால் தலிபான் அரசு கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

    • நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும், நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

    ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது.
    • இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.

    ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த சூழலில் தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் ஒரு பெரிய அணையைக் கட்டி, நீர் ஓட்டத்தைக் தடுக்க தாலிபான் முடிவு செய்துள்ளது.

    அணையின் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு தாலிபான் உச்ச தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில் உருவாகும் 480 கி.மீ நீளமுள்ள குனார் நதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது. பாகிஸ்தானில், இது சித்ரல் நதி என்று அழைக்கப்படுகிறது.

    காபூல் நதி ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாயும் மிகப்பெரிய நதியாகும். இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.

    குனார் நதியில் அணை கட்டப்பட்டால், அதன் தாக்கம் காபூல் நதியிலும், பின்னர் சிந்து நதியிலும் இருக்கும். இது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்

    முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது போல ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நீராதாரத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவது கவனம் பெற்றுள்ளது.

    தாலிபான்கள் இந்தியாவிடம் சேர்ந்து டங்காக்குக்கு எதிராக பயங்கரவாத சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே நிலநடுக்கம்.
    • முதற்கட்ட தகவலில் உயிரிச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது.

    கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் 4ஆம் தேதி 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்து. தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

    • பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.
    • பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் எல்லையில் ஏற்பட்ட சண்டை நேற்று மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய பீரங்கிகளை ஆப்கானிஸ்தான் தெருக்களில் தாலிபான்கள் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானுடனான சண்டையின் போது ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபுல்லா முஜாஹித் முன்னதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் கூற்றை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வீடியோக்களில் காணப்படும் பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், தாலிபான்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டாங்கிகளைக் காட்சிப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார். 

    • இருநாட்டு எல்லையில் பயங்கர மோதல்.
    • பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர்.

    ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் விமானப்படை, திடீரென காபூல் நகர் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் இருநாட்டு எல்லையில் உள்ள நகரின் மார்க்கெட் மீது தாக்குதல் நடத்தியது.

    இது ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இருநாட்டு எல்லையில், எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்திருந்தது.

    அதேவேளையில், ஆப்கானிஸ்தானின் 200 தலிபான்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை எல்லையில் மீண்டும் மோதிக் கொண்டனர். இதில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் டிரோன்கள் மூலம் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்தனர். அதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

    தலிபான், பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்ததுடன், ராணுவ டேங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்த டேங்குகள் மூலம் தலிபான் நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்திருந்தது.

    பாகிஸ்தானின் சமான் மாவட்டமும், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாவட்டமான ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் எல்லையில்தான் இந்த பயங்கர சண்டை நடந்தது.

    ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம்- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் இடையே உள்ள எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் 12 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஆயுதங்கள் மற்றும் டேங்குகள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையம் போன்றவைகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.

    அதேவேலையில் எந்தவித தூண்டுதல் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது என பாகி்ஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் தலிபானன் அரசு இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    • இன்று காலை எல்லையில் உள்ள பாகிஸ்தான் புறக்காவல் நிலையத்தை டிரோன் மூலம் தகர்ப்பு.
    • ராணுவ டேங்குகள், ஆயுதங்களை கைப்பற்றியதாக தலிபான் அரசு தகவல்.

    ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் விமானப்படை, திடீரென காபூல் நகர் மீது தாக்குதல் நடத்தியது.

    இது ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இருநாட்டு எல்லையில், எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்திருந்தது.

    அதேவேளையில், ஆப்கானிஸ்தானின் 200 தலிபான்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை எல்லையில் மீண்டும் மோதிக் கொண்டனர். இதில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் டிரோன்கள் மூலம் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    தலிபான், பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்ததுடன், ராணுவ டேங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்த டேங்குகள் மூலம் தலிபான் நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்துள்ளது.

    பாகிஸ்தானின் சமான் மாவட்டமும், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாவட்டமான ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் எல்லையில்தான் இந்த பயங்கர சண்டை நடந்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம்- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் இடையே உள்ள எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் 12 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஆயுதங்கள் மற்றும் டேங்குகள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையம் போன்றவைகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.

    அதேவேலையில் எந்தவித தூண்டுதல் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது என பாகி்ஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
    • குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம்சாட்டிய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.

    நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது.

    இந்த தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இன்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்தச் சண்டையின்போது கூடுதலாக 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர் எதிர்த்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால் வலுவான பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானை எச்சரித்தார். 

    குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாகக் கூறும் கூற்றுக்களை அவர்கள் நிராகரித்தனர்.

    இந்த தாக்குதலில் பீரங்கிகள் மற்றும் வான்வழி ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். தாலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியா வருகை தந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×