search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video viral"

    • வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் மீது சிலிண்டரின் பாகம் பட்டு உயிரிழப்பு.
    • தீ விபத்தால், தீ பரவி அருகில் இருந்த டீக்கடை, 3 சக்கர வாகனம் நாசம்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள தாபாவில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    விபத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் மீது சிலிண்டரின் பாகம் பட்டு, உயிரிழந்தார்.

    இந்த தீ விபத்தால், தீ பரவி அருகில் இருந்த டீக்கடை, 3 சக்கர வாகனம் ஆகியவையும் எரிந்து சாம்பலானது.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பில்ஹூர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது, உயிரிழந்த நபர் எடுத்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மிக ஆர்வம் உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்'
    • அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார்.'தல' என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

    அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மற்றும் சமையல் உள்ளிட்டசெயல்பாடுகளில் மிக ஆர்வம்உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' . அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.'விடாமுயற்சி' நட்பால் நடிகர் ஆரவும் இந்த சுற்றுப் பயணத்தில் அவருடன் இணைந்து உள்ளார்.

    ஒரு அடர்ந்த காட்டில் நடிகர் அஜித் கேஸ் அடுப்பில் ஒரு அண்டாவில் சிக்கன் பிரியாணி சமைத்து அவரது நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது அந்த பிரியாணி சமையல் வீடியோ, புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.




     


    மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்

    நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி  உள்ளனர். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரும் புத்தாண்டில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு யூடியூப் சேனல் நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற சனோஜ் என்பவர், நடிகர் மம்முட்டி இறக்க வேண்டும் என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு சனோஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் 2 நாட்களாக தூங்கவில்லை என்றும், தனது செயலுக்காக மம்முட்டி, அவரது மகன் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    • வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.

    இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39),இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பேட்டரி கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் டி. வி. நகர் பகுதியை சேர்ந்த குணால் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்டபோது எம்.ஜி. ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் அவரது கூட்டாளிக ளான சபரீசன், ஜாஸ்மி ன்,அமீர்,மற்றும் 5-க்கும் மேற்ப ட்டோர் திடீரென கடை ஊழியர் குணாளின் வாகனத்தை நிறுத்தி இந்த தெருவில் நீ வேகமாக செல்லக்கூடாது எங்களை பார்த்துவிட்டு மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட கடை உரிமையாளர் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் ஏன் எங்கள் கடையில் வேலை செய்யும் நபரை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ரமேஷ் மற்றும் பரமேஸ்வரியையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிள்,கடை போர்டு போன்ற பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சபரிசன் மற்றும் ஜாஸ்மின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் முக்கிய குற்றவாளியான பார்த்திபனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வணிகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. உடனடியாக போலீசார் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
    • நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

    அங்கு விற்பனையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார். ரூ.600 கொடுத்து மீதி 10 ரூபாய் சில்லரை கேட்டுள்ளார்.

    அதற்கு செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாக போய்விட்டது என்றும் மீதி சில்லரை இல்லை என்றும் செல்வம் கூறியுள்ளார். அதற்கு மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி 10 ரூபாய் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் வேலை பார்க்கும் பொழுது மது பிரியர் ஒருவரை சில்லரை கேட்டதற்காக அடித்து உதைத்த வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்து அதே பாணியை கடைபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    • நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
    • அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    பணகுடி:

    நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    இதில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    கடந்த 2 மாதங்களாக மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ராதாபுரம் பகுதியில் உள்ள சில கல்குவாரிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆவரைகுளம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து இரவு நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு எடுத்து செல்லப்படுவது அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ளது.

    அந்த காட்சி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான குவாரிகள் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமானதாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ×