என் மலர்
நீங்கள் தேடியது "DGP"
- வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.
- அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார்.
- அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். புரன் குமார். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். புரன் குமாரின் மனைவி அம்னீத்குமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் அரியானா அரசில் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை ஆணையாளர் மற்றும் செயலாளராக உள்ளார்.
அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவர் நாடு திரும்பினார்.
இந்தநிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் மீது அம்னீத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
போலீசில் அம்னீத்குமார் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
டி.ஜி.பி சத்ருஜீத் கபூர், ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் எனது கணவரை பொய்யான புகாரில் சிக்க வைக்க சதித்திட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல.
ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை சக்திவாய்ந்த மேலதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தியதன் நேரடி விளைவு ஆகும். அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையால் உடைந்து போன எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அம்னீத்குமார் கூறும்போது, பல ஆண்டு களாக எனது கணவர் அவமானம், துன்புறுத்தலை எதிர்கொண்டார். டி.ஜி.பி கபூரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்பமான புகாரில் தன்னை பொய்யாக சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப் படுவதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்து இருந்தார் என்றார். அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது.
- போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
பாமக-வின் திலகபாமா தென்காசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விரோதமாக இருக்கின்ற.., அன்று வெள்ளைக்காரன் விரோதமாக இருந்தான். இன்று திமுக விரோதமாக இருக்கிறது. இதற்கு எதிராக இன்று ஒருங்கிணைக்கும் பணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மூலம் செய்து கொண்டிக்கிறார். அந்த வகையில் அனைத்து தமிழ்மக்களும் ஒன்றிணையும் கட்டாயத்தில் இருகிக்கிறோம்.
மக்கள் விரோதம் என எந்த அர்த்தத்தில் சொல்கிறோம் என்றால், இன்று பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. குழந்தைகளை பத்திரப்படுத்த (பாதுகாக்க) முடியவில்லை. பெண்களை பத்திரப்படுத்த முடியவில்லை. போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் காவல்துறை நிர்வாகம் எவ்வளவு முக்கியமானது?. அவர்களுக்கு சாதகமாக யார் இருப்பார்களோ? அவரை சட்டத்தை வளைத்து கொண்டு வந்துள்ளார்கள். இது மிகவும் மோசமான முன்னுதாரணம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகமிக முக்கியம். இந்த நேரத்தில் முதலமைச்சர் இதை உடனடியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் டிஜிபி உத்தரவு குறித்து சொல்லியிருக்கிறது. அதையும் மீறி சட்டத்தை வளைத்து நியமனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு திலகபாமா கூறினார்.
- டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார் வெங்கட்ராமன்.
- ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
நேற்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், சென்னை காவல் ஆணையர் அருண், வெட்கட்ராமன் பொறுப்பேற்றபோது நேரில் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை சென்னை காவல் ஆணையர் அருண் சந்தித்துள்ளார்.
சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் நேரில் சென்று அவர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
சங்கர் ஜிவால் விடைபெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது.
- தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு முடிவு.
தமிழக காவல் டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவருக்கு தீ ஆணைய தலைவர் பதவி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது.
தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதிதாக தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதில் சங்கர் ஜிவாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும்.
- பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், அரியலூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசாருக்கு தகுந்த உத்தரவை எடுக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். பின்னர், ''அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும். பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோரினால் பாதிக்கப்படும் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில், வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி. எடுக்கவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு.
- ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில்," அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 13 கட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது" என குறிப்பிட்டுள்ளார்.
- ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.
- குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
- தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.
அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
- மு.க.ஸ்டாலின் சேலம் வருகையை ஓட்டி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
- இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
சேலம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையை ஓட்டி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர், மேட்டூர் அணையை திறந்து வைக்க மேட்டூருக்கு சென்றதால் அவருடன் பாதுகாப்பு பணியில் டி.ஜி.பி சைலேந்தி ரபாபு ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கருமலை கூடல் போலீஸ் நிலையத்தில் சென்ற அவர், போலீஸ் நிலைய வர வேற்பாளர் பணி குறித்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலைய பதிவேடு களையும் பார்வையிட்டார்.
என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வர்களை கைது செய்துள்ளீர்கள் என போலீசாரிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசா ரித்தார்.போலீஸ் நிலை யத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் பொது மக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்க ளின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசா ருக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக மேச்சேரி போலீஸ் நிலையத்திலும் பதிவேடுகளை பார்வை யிட்டார். 2 போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்ததில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட் டுள்ளது என்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய எழுத்தர்களுக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரையும் அவர் பாராட்டினார். முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவ லர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றி னார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பா ளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்கா ணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்தி ரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாக ராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.
- முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது.
- துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வண்டலூர்:
தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. நாளை வரை இந்த போட்டிகள் நடை பெறுகின்றன.
இதனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.






