என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "explosive blast"

    • வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.

    பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி வெடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள உக்காடு தென்பரையை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவருடைய மனைவி புஷ்பவள்ளி (வயது 55).

    இவர் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு கார்வயல் கோட்டகம் என்ற இடத்தில் உள்ள வயலில் புல் அறுக்க சென்றார். வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை கொல்ல வயல் வரப்புகளில் வெங்காய வெடி என்ற ஒரு வகை வெடியை வைப்பது வழக்கம்.

    புஷ்பவள்ளி வயலில் புல் அறுத்து கொண்டிருந்த போது வரப்பில் பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி, புஷ்பவள்ளி கையில் இருந்த அரிவாளில் சிக்கியது. அப்போது அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் புஷ்பவள்ளியின் இடது கை மணிக்கட்டு வரை சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புஷ்பவள்ளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி வெடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×