என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடித்து சிதறிய"

    • வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.

    • மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.
    • வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் தகர மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.

    கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். நேற்று பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உ டனே அங்கு விரைந்து சென்ற நிலைய அதிகாரி உதயகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை அக்கம் பக்கம் பரவவிடாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    இது குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்திய போது, பழனியம்மாள் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி விட்டு அணைக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் நீண்ட நேரம் எரிந்த அடுப்பு வெப்பம் தாங்காமல் ரப்பர் குழாய் வழியாக தீ பரவி சிலிண்டருக்கு சென்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எரிந்து சாம்பலானது.

    பாதிக்கப்பட்ட பழனியம்மாளுக்கு வருவாய்துறை சார்பில் புடவை, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது. 

    ×