என் மலர்
நீங்கள் தேடியது "ஜம்மு-காஷ்மீர்"
- வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
- தீ விபத்தில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
ஸ்ரீநகர்:
ஜம்முவில் உள்ள சட்டசபை வளாகத்தில் முகப்பு அறை பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர்.
- அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராம்பன் மாவட்டம் பக்னா கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து ஓடியதால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களுக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி-பனிஹால் இடையே பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.
நிலச்சரிவால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, "ராம்பனில் ஏற்பட்ட துயரமான நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளன. உடனடி மீட்பு முயற்சிகளை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
இன்று மாலை, மறுசீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்டவற்றை நான் மதிப்பாய்வு செய்வேன். பயண ஆலோசனைகளை கடைபிடிக்கவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அத்தியாவசியமற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும் மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் இருந்து மதுரைக்கு நாளை முன்பதிவற்ற ெரயில் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
ஜம்மு காஷ்மீர்-மதுரை இடையே முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இது நகர்லாகூனில் இருந்து நாளை (7-ந்தேதி) இரவு 11.50 மணிக்கு புறப்படுகிறது. அந்த ெரயில் 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு காட்பாடி வருகிறது. அதன் பிறகு காலை 7.52 மணிக்கும் சேலத்துக்கும், 8.50 மணிக்கு ஈரோட்டுக்கும், 9.43 மணிக்கு திருப்பூருக்கும், 10.42 மணிக்கு கோவைக்கும், மாலை 2.10 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், 4 மணிக்கு மதுரைக்கும் வருகிறது.
இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
- கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.
அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தாங்க அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
- என்கவுண்டரில் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
- பதுங்கு குழி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அம்மைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர்நேற்று முன் தினம் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்த நிலையில் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் அவர்கள் வீட்டின் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் சுவரில் ரகசிய பதுங்கு குழி [BUNKER] அமைத்து அதில் அவர்கள் பதுங்கியிருந்து கண்டுபிடிக்கப்பட்டிள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
இதுதொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும். ஜஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை- அசாம் முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On 4 Army personnel who have lost their lives in action in J&K's Doda, Assam CM Himanta Biswa Sarma says," The government will give an answer to Pakistan-sponsored terrorism. It is our duty to maintain peace in Jammu & Kashmir." pic.twitter.com/l2Fk750DZx
— ANI (@ANI) July 16, 2024
- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது
- காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்
சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிப்பு
அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில். சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் அறவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 ,அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்திருந்தார். கடந்த முறை அரியானாவிற்கும் மகாராஷ்டிராவிற்கும் ஒரே சமயத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த வருடம் மகாராஷ்டிர தேர்தல் தாமதமாகியுள்ளது. நவம்பர் மாதமே அங்கு தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இது அரசியல் களத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு என்னதான் ஆச்சு? - ஆணையம் சொல்வது என்ன?
'சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளதாலும் , அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளதாலும் மகாராஷ்டிராவில் அதே நேரத்தில் கவனம் செலுத்த முடியாது. கடந்த முறை நிலைமை வேறு. அப்போது காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. ஆனால் இப்போது காஷ்மீருக்கு அதிக பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள். அது மட்டுமின்றி தற்போது மகாராஷ்டிராவில் கனமழை காலமாக உள்ளது. [விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி] என வரிசையாக விழாக்களும் வர உள்ளது. எனவேதான் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தாமதமாகிறது' என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அரசியலாகும் தேர்தல் தாமதம்
ஆனால் இந்தியா கூட்டணி மகா விகாஸ் தலைவர்கள் இந்த தாமதத்தைச் சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா அணியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேர்தல் ஆணையம் பாஜவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. சட்டவிரோத பாஜக அரசு மனசாட்சியின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கான்டிராக்டர்கள் மூலம் மாநிலத்தை பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் கொள்ளையடிக்கத் தேர்தல் ஆணையம் வழி செய்து கொடுத்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்காமல் இருப்பதற்கு இன்னும் தேர்தல் ஆணையத்தின் எஜமான் பாஜக தலைமையிலிருந்து உத்தரவு வரததே காரணம். தேர்தல் தாமதத்துக்கு காஷ்மீரை காரணமாக கூறுகின்றனர். எனவே சமீப காலமாக அங்கு அதிகரிக்கத்தொடங்கியுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடுமையாக சாடியுள்ளார்.
- உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
- நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் களம்
இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

தீர்மானம்
தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல அரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது.
இந்த தேர்தலோடு மராட்டியம் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.
இந்த நிலையில் காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. அதன் பிறகு தான் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்க ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியாகும்.
மராட்டிய மாநில சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் , ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது.
மராட்டிய மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று தோ்தல் நடைபெற்றது.
- முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தோ்தல் நடைபெறுகிறது.
ஜம்மு- காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) தோ்தல் நடைபெற்றது.
இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் நின்றனர். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள்.
தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறு வதை உறுதிசெய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. துணை ராணுவப் படையினா், ஜம்மு- காஷ்மீா் ஆயுதப் படையினா், போலீசார் ஆகியோா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பின்னர், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ந்தேதியும், 3-ம் கட்ட மாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் (அக்டோ பா்) 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.






