search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam CM"

    • அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிக்கும்.
    • பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை கிடையாது.

    கவுகாத்தி:

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள்.
    • சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை பாதுகாக்க முடியாது.

    கட்ச்:

    குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில்  அவர் பங்கேற்று பேசினார்.

    அப்போது டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை அவர் எழுப்பினார்.

    அப்தாப் மும்பையில் இருந்து ஷ்ரத்தா என்ற சகோதரியை வரவழைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார். மேலும் அவர் அந்த உடலை குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். உடல் பாகங்கள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும்போது, ​​​​வீட்டிற்கு மற்றொரு பெண்ணை அழைத்து வந்து டேட்டிங் செய்யத் தொடங்கினார். 

    ஏன் அவர் இந்து பெண்களை மட்டும் குறி வைத்து காதலில் வீழ்த்துகிறார் என போலீசார் விசாரித்தனர். ​​அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதால் அப்படி செய்வதாக அப்தாப் கூறியுள்ளார். இதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பங்கள்  நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம்.

    நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×