என் மலர்
நீங்கள் தேடியது "singer"
- பாடகி மங்லி தனது பிறந்தநாளை பிரபல ரிசார்ட்டில் கொண்டாடினார்.
- பிறந்தநாள் நிகழ்ச்சியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
தெலுங்கு திரை உலகில் பிரபல பாடகியாக இருக்கும் மங்லி மிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களையும் இவர் பாடி இருக்கிறார்.
இந்நிலையில் மங்லி தனது பிறந்தநாளை பிரபல ரிசார்ட்டில் கொண்டாடினார். அந்த விழாவில் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் விருந்தினராக கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்திய போது ஏராளமான கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்த்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாடகி மங்லி போதைப் பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாடகி மங்லி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், என்னுடைய பர்த்டே பார்ட்டில போதைப்பொருள், வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்படவில்லை" என்று பாடகி மங்லி விளக்கம் அளித்துள்ளார்.
- பாஜக என்பது நாடு அல்ல. பிரதமர் கடவுள் அல்ல.
- நீங்கள் கேள்வி கேட்டால், உங்களை தேசத்துரோகி என்றும் முத்திரை குத்துவார்கள்.
போஜ்புரி நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கவிஞர் அபய் பிரதாப் சிங்கின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவுகள் நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் என்று புகாரில் கூறப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் குறித்து நேஹா கேள்வி எழுப்பியதாகவும், தேச விரோத அறிக்கைகளை வெளியிட்டதாகவும், இது அமைதி மற்றும் பொது ஒழுங்கை மீறும் வாய்ப்பை உருவாக்கியதாகவும் அபய் பிரதாப் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
நேஹா சிங் கூற்றுகள் பாகிஸ்தானில் வைரலாகிவிட்டன, அங்கு ஊடகங்கள் அவற்றை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகின்றன என்றும் அபய் பிரதாப் தெரிவித்தார்.
இந்நிலையில் தன் மீதான எஃப்.ஐ.ஆர் குறித்து புதிய வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, அரசு மீது நேஹா கடுமையான விமரசனங்களை முன்வைத்துள்ளார்.
நேஹா கூறியதாவது, பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது? எனக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் விரும்புகிறது.
உங்களுக்கு தைரியம் இருந்தால் பயங்கரவாதிகளின் தலைகளைக் கொண்டு வாருங்கள். உங்கள் தோல்விகளுக்கு என்னைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
என்னுடைய கேள்விகளில் அரசாங்கத்திற்கு பிரச்சனைகள் உள்ளன. அதனால்தான் அவர்கள் நான் கேள்விகள் கேட்பதைத் தடுக்க விரும்புகிறார்கள்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் உண்மையான கேள்வி. எத்தனை பயங்கரவாதிகளின் தலைகளைக் கொண்டு வந்தீர்கள்? பாகிஸ்தானுக்குப் போய் பிரியாணி சாப்பிடவா நாடு உங்களைத் தேர்ந்தெடுத்தது? இதற்கு ஏதாவது பதில் இருக்கிறதா?
இந்த நாட்டு மக்களிடம் நீங்கள் இதற்குத்தானே வாக்களித்தீர்கள் என்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் கேள்வி கேட்டால், உங்களை தேசத்துரோகி என்றும் முத்திரை குத்துவார்கள்.
பாஜக என்பது நாடு அல்ல. பிரதமர் கடவுள் அல்ல.ஜனநாயகத்தில் விமர்சனங்கள் இருக்கும். கேள்விகள் நிச்சயமாகக் கேட்கப்படும். என்னுடைய கேள்விகளில் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை இருந்தால், அதிகாரத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சிக்கு வாருங்கள். அப்புறம் நான் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன்' என்று தெரிவித்தார்.
- குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சென்னை:
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு 'பத்மபூஷண்' விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.
பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
- ஜெய் இசட்டுக்கு இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.
இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினர் உள்பட பலருக்கு கிராமி விருது வழங்கப் பட்டது.

இதுபோன்று அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். அவர் விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- தனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல் முறையாக தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பாடகியும், யூடியூபருமான மைதிலி தாக்கூர் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டுக்கான கலாசார தூதுவர் என்ற விருது வழங்கப்பட்டது.
எப்போதும் எனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நீங்கள் ஒரு பாடல் பாடுகிறீர்களா? என அவரிடம் பிரதமர் மோடி கேட்டார். அவரும், சரி பாடுகிறேன் என பதிலளித்தார்.
இதையடுத்து, அப்படியானால் எனது பேச்சு மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என கிண்டலாக கேட்டார். மைதிலி, "இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை. மக்களுக்காக பாடுகிறேன் என்றேன்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பாடிய பாடலை பிரதமர் மோடி ரசித்துக் கேட்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
- நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.
- அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பாராட்டியுள்ளார்.
- மத சுதந்திரத்தை நிலைநிறுத்தியதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாஷிங்டன்:
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடியை அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி தலைமையிலான அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் இந்திய அரசாங்கத்தின் இரக்கமுள்ள தலைமைக்காகவும், மிக முக்கியமாக துன்புறுத்தப்பட்டவர்களை வரவேற்பதில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்தி யதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- உமா ரமணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.
'நிழல்கள்' படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் உமா ரமணன் (69). மேலும் இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார்.
பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர் இசையிலும் பாடி உள்ளார். இருந்த போதிலும் இளையராஜா இசையில் 100 - க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.இதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்த அவர் நேற்று இரவு 9 அவரது இல்லத்தில் காலமானார்.

உமா ரமணன் 1000 க்கும் மேற்பட்ட மேடை கச்சேரியில் கணவர் ரமணனுடன் இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.

அவரது மறைவுக்கு இசை ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உமா ரமணன் பாடிய சில சூப்பர் ஹிட் பாடல்கள் வருமாறு :- பூங்கதவே தாழ் திறவாய்... - (நிழல்கள் படம் ) ஆனந்த ராகம்... - (பன்னீர் புஷ்பங்கள்)

பூபாளம் இசைக்கும்... (தூரல் நின்னு போச்சு)
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு... (மெல்ல பேசுங்கள்) கஸ்தூரி மானே... (புதுமைப் பெண்)
நீ பாதி நான் பாதி... (கேளடி கண்மணி)
ஆகாய வெண்ணிலாவே... (அரங்கேற்ற வேளை)
பொன் மானே கோபம் ஏனோ... (ஒரு கைதியின் டைரி) கண்மணி நீ வர காத்திருந்தேன் (தென்றலே என்னை தொடு) ராக்கோழி கூவையில... (ஒரு தாயின் சபதம்) ஏலேழம் குயிலே... (பாண்டி நாட்டு தங்கம்)

பூத்து பூத்து குலுங்குதடி... (கும்பக்கரை தங்கையா)
பூங்காற்று இங்கே வந்து... (வால்டர் வெற்றிவேல்)
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... - (நந்தவன தேரு)
கண்ணும் கண்ணும் தான்... ( திருப்பாச்சி)

உமா ரமணன் மறைவை யொட்டி அவரது கணவர் ரமணன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது :-
எனது மனைவி உமா ரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில் இறைவனடி சென்றார். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை.
இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, இது உமா ரமணனின் ஆசை என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மனைவியை இழந்து வாடும் ரமணனுக்கு ஆழ்ந்த இரங்கல், மற்றும் ஆறுதலை இணைய தளத்தின் வாயிலாக ஏராளமானோர் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன் தி பேங்க்’ எனும் பெயரில் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன் தி பேங்க்’ எனும் பெயரில் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர் உருவாக்கப்படும் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, 'மணி இன் தி பேங்க்' எனும் பெயரில் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மணி இன் தி பேங்க்' எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். அபிஷேக் ரங்கனாதன் இப்பாடலை இயக்கி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். துபாய் பாலை வனத்தில் பாடலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
- துபாயில் ஜூலை 6-ந்தேதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது.
தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபு ரோசிக். 3 அடி உயரம் கொண்ட இவர் தடைகளை தகர்த்து தனது திறமையின் மூலம் பாடகராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமான இவர் இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவருக்கும் தஜிகிஸ்தான் பாடகி அமீராவுக்கும் திருமணம் முடிவாகி கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் திருமணத்தை தள்ளிவைத்திருப்பதாக கூறி உள்ளார். துபாயில் ஜூலை 6-ந்தேதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இருப்பதால் தனது திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
- 10 முறை கிராமிய விருதை வென்றுள்ளார்.
- கடந்த மார்ச் மாதம் புதிய ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மதுபோதையில் கார் ஓட்டியதாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஃப்போல்க் கவுன்ட்டி மாவட்ட அட்டார்னி அலுவலகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
டிம்பர்லேக் தி சோசியல் நெட்வொர்க் மற்றும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாடகர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான கிராமிய விருதுகளை 10 முறை வென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனது புதிய ஆல்பமான எவ்ரிதிங் ஐ தாட் இட் வாஸ் (Everything I Thought It Was) வெளியிட்டார். இதை பிரபலப்படுத்தும் வகையில் "Forget Tomorrow" என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜஸ்டின் டிம்பர்லேக் அடுத்த வாரம் சிகாகோவின் யுனைடெட் சென்டர் மற்றும் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் தலா இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
ஜூலை 9-ந்தேதி வடஅமெரிக்காவின் கென்டக்கியில் தனது பயணத்தை முடித்து, மாத இறுதியில் ஐரோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
- பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக் பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
- உங்களுடைய ஹெட்போன்களில் இசையை அதிக சத்தத்துடன் வைத்து கேட்பதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
புதுடெல்லி:
பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக். 58 வயதான இவர் பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 2 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர், தமிழில் 'ஓரம்போ' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 'இது என்ன மாயம்' என்ற பாடலை பாடியுள்ளார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'நான் சில வாரங்களுக்கு முன்பு விமானத்தில் இருந்து வெளியேறும்போது திடீரென என்னால் எதையும் கேட்க முடியவில்லை. எனக்கு வைரஸ் தாக்குதலால் காதுகளில் மிகவும் அரிதான உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களுடைய ஹெட்போன்களில் இசையை அதிக சத்தத்துடன் வைத்து கேட்பதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள்' என்று கூறியுள்ளார்.