என் மலர்
நீங்கள் தேடியது "பீகார் எம்எல்ஏ"
- 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
- ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
குறிப்பாக, மைதிலி தாகூர் தமிழின் மீது கொண்டுள்ள ஆர்வம் உண்மையிலேயே வியக்கத்தக்கது. "முத்தையருள் பத்தித் திருநகை..." என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாக்கூர் முருகன் பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழின் கடினமான சந்தப் பாடல்களை இவ்வளவு துல்லியமான உச்சரிப்புடன் பாடுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையில், ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். தலைமறைவாக இருந்த ராஜ்பல்லா யாதவை பின்னர் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் இரண்டாண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராஜ்பல்லா யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளார். இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக வரும் 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. #RJDMLA #RajballabhYadav #RajballabhYadavconvicted






