என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைதிலி தாகூர்"

    • நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.
    • ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது.

    பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வுமான மைதிலி தாகூர், இன்று (பிப்.10) சட்டப்பேரவையில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மங்கல் பாண்டேவை மைதிலி தாகூர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதாவது தனது தொகுதியான அலிநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் மோசமான நிலைக்குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கட்டிடம் மோசமான நிலையில் இல்லை என்றும், பழுதுபார்ப்பு மட்டுமே தேவை என்றும் பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மைதிலி சட்டப்பேரவையில், 

    "அமைச்சரின் பதிலில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. ஏனெனில்,'கட்டிடம் மோசமான நிலையில், சிறிய பழுதுவேலைலகள் மட்டுமே இருப்பதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.

    அங்கே ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு இப்போது மருத்துவர் யாரும் இல்லை, கடந்த காலத்தில் அங்கு இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது இல்லை. நான் மிகவும் சிறிய வயதிலிருந்தே சுகாதார அமைச்சரைப் பார்த்து வருகிறேன். அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதை நான் கவனித்து வருகிறேன். எனவே, இது மிகவும் முக்கியமானது என்பதால், அவர் பொதுமக்களின் நலனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    ஐந்து முதல் ஏழு பஞ்சாயத்துகள் இந்த மருத்துவமனையைச் சார்ந்துள்ளன. இந்த மருத்துவமனையிலிருந்து 40,000 முதல் 50,000 பேர் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனை எனது முழு தொகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, இதன் மூலம் கன்ஷ்யாம்பூர் மற்றும் அலினகர் ஆகிய இரண்டு கிளைகளும் பயனடைய முடியும்" என தெரிவித்தார். 

    தனது சொந்தக் கட்சியின் அமைச்சரையே சட்டப்பேரவையில் விமர்சித்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் மைதிலி தாகூரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். 

    ×