என் மலர்tooltip icon

    இந்தியா

    பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் சந்தேகம்.. சிறப்பு விசாரணை குழு அமைத்த அசாம் முதல்வர்
    X

    பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் சந்தேகம்.. சிறப்பு விசாரணை குழு அமைத்த அசாம் முதல்வர்

    • 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
    • கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    கவுஹாத்தி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.

    மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    இந்த நிலையில், ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா தெரிவித்தார்.

    Next Story
    ×