என் மலர்
நீங்கள் தேடியது "Murder"
- வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
- எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர்:
மானாமதுரையில் இருந்து விருதுநகர் மாவட் டம் புலியூரான் கிராமத்திற்கு இடையே செல்லும் ரெயில் தண்டவாள பகுதியில் தொட்டியங்குளம் என்ற இடத்தில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்தவரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. மாறாக அவரது உடலில் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.
இதையடுத்து ரெயில்வே போலீசார் விருதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மற்றும் போலீசார் வந்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பிணமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
இறந்து கிடந்தவர் சிவப்பு நிற சட்டை, பனியன் மற்றும் கைலி அணிந்திருந்தார். சம்பவம் தொடர்பாக புலி யூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானிதேவி விசாரணை நடத்தி புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையுண்டவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
- மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கொடியாலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர் பின்னர் வீடு திரும்பினார். அதன் பின்னர் இரவு கோகுல் மற்றும் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.
நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் வீட்டில் புழுக்கமாக இருந்த காரணத்தால் கதவுகளை திறந்து வைத்து அண்ணன், தம்பி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தக்க தருணம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்தனர்.
இதில் துடிதுடித்த அவர் வேதனை தாங்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே ஓடி வாசலில் விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கோகுலின் அலறல் சத்தம் கேட்டு சகோதரர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் சற்று நேரத்திலேயே அவரது மூச்சு அடங்கிவிட்டது.
இது குறித்து ஜீயபுரம் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கோகுல் மீது அடிதடி வழக்குகள் உள்ளது. இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐடிஐ மாணவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம்
- பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான்
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47).
2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான. அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான்.
ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான்.
இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும், அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான்.
லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான்.
குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.
- பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
- சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணா ம்புக்கார தெருவை சேர்ந்தவர் காத்தாடி ராஜா (வயது 52) பூ வியாபாரி . இவர் பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (37), வீரமணி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபம் அருகே ராஜா நின்று கொண்டிருந்தார். அங்கு காலை நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்களும் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கார்த்தி, வீரமணி முன்விரோதத்தை மனதில் கொண்டு ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கார்த்தி, வீரமணி ஆத்திரம் அடைந்து அரிவாளால் காத்தாடி ராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காத்தாடி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காத்தாடி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடிய இடத்தில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
- தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலையும் ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த காஞ்சிபுரம் ரெயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே கொலையாளி ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த ஜனவரி மாதம் நவநீதன் கிருஷ்ணன் கோவிலில் வைத்து ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
- பேச்சிமுத்து உள்பட 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65). ஆட்டோ டிரைவர்.
வெட்டிக்கொலை
இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
4 பேர் கைது
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் நவநீதன் கிருஷ்ணன் கோவிலில் வைத்து ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக அந்த கொலையில் தொடர்புடைய ஒருவரின் உறவினரான விஜயகுமாரை, அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக 12 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில் மேலச்செவலை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்ற கண்ணன் (வயது 25), முப்பிடாதி (20), மேலச்செவல் ரஸ்தா தெருவை சேர்ந்த மாயாண்டி (21), நடுக்கல்லூரை சேர்ந்த பேச்சிமுத்து (20) ஆகிய 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
இதற்கிடையே 4 நாட்களாக விஜயகுமார் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து மேலச்செவல் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், தாசில்தார் விஜயா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் விஜயகுமாரின் மனைவி அல்லது மகனுக்கு வேலைக்கு பரிந்துரை செய்வது, விதவைகளுக்கான சலுகைகள், நிவாரண உதவி கிடைக்க உதவி செய்வது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று உடலை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கேரளாவில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
- கொலையாளி பென்னி பரபரப்பு வாக்குமூலம்
கோவை,
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அவரை பென்னி என்பவர் அடித்து கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பென்னி ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பி விட்டார்.
எனவே கோவை போலீசார் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் பதுங்கி இருந்த பென்னியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பென்னி போலீசிடம் அளித்த வாக்குமூலம் பற்றி கூறப்படுவதாவது:-
நான் கோவை ஆடிஸ் வீதி பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு சமையல் தொழிலாளி ராஜேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அவருடன் சேர்ந்து சமையல் வேலைக்கு சென்று வந்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பது வழக்கம். அந்த நேரங்களில் எல்லாம் ராஜேஷ் என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்துவார்.
இந்த நிலையில் நான் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு ஆடிஸ் வீதி பிளாட்பாரத்தில் படுத்திருந்தேன். அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
உடனடியாக காந்திபுரம் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுகுடித்தேன். அப்போது ராஜேசை கொல்வது என்று முடிவு செய்தேன். பின்னர் மீண்டும் ஆடிஸ் வீதிக்கு வந்து சேர்ந்தேன். அப்போது ராஜேஷ் பிளாட்பார மேஜையில் படுத்து இருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு கொலைவெறி ஏற்பட்டது. எனவே அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினேன்.
இதில் ராஜேஷ் இறந்து விட்டார். அதன்பிறகு உருட்டுக்கட்டையை வீசி விட்டு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கேர ளாவுக்கு தப்பி சென்றேன்.
சமையல் தொழிலாளி ராஜேஷ் கொலை வழக்கில் போலீசார் என்னை சந்தேகப்படமாட்டார்கள் என கருதினேன். ஆனால் அவர்கள் சரியாக துப்பறிந்து, கேரளாவில் பதுங்கியிருந்த என்னை மடக்கி பிடித்து விட்டனர்.
இவ்வாறு போலீசாரிடம் பென்னி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கோவை சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி படுகொலை செய்ததாக, பென்னியை போலீசார் கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
- ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது.
- கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
வெட்டிக்கொலை
இவர் நேற்று முன்தினம் இரவு கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் மேலச்செவல் கிருஷ்ணன் கோவிலில் மது அருந்தி யவர்களை தட்டிக்கேட்டது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவந்து, ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். அதில் ஒருவரின் உறவினர் தான் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள விஜயகுமார் என்பதால் பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 பேரிடம் விசாரணை
இதுதொடர்பாக அதே ஊரை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே குற்றவாளி களை கைது செய்யும் வரை விஜயகுமாரின் உடலை வாங்க வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து விட்டனர். அவர்களிடம் போலீசார், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயகுமார் மகனுக்கு அரசு வேலை, ரூ.1 கோடி நிவாரணம், கொலை யாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை அவரது உறவினர்கள் விதித்தனர்.
அதனை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி அரசுக்கு பரிந்துரை செய்வதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். எனினும் இன்றும் 2-வது நாளாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
- சிறுமி மஞ்சுளாவின் உடலை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா.
தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை).
கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரபண்டா மனைவியை சரமாரியாக தாக்கினார்.
இதில் ஆத்திரம் அடைந்த லலிதா நேற்று காலை பிஜன பள்ளி போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லலிதா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றார். பின்னர் கல்வ குர்தி என்ற இடத்தில் செல்லும் பாசன கால்வாய் சென்றார்.
அங்கு தனது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் தள்ளினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மட்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
லலிதா அங்கிருந்து தப்பிச் சென்றார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பாசன கால்வாயில் இருந்து மருகொண்டா மகாலட்சுமி, சரிதா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். சிறுமி மஞ்சுளாவின் பிணத்தை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.
பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சத்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஹாய்’ என அழைத்து அழகி ஜுலி பேச தொடங்கியுள்ளார்.
- ஆன்லைன் மூலமாக சத்யாவின் செல்போனுக்கு அனுப்பி வைத்து விட்டு கிஷோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
புழல் காவாங்கரையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ந்தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடை ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சத்யாவை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசின் பிரிட்ஜ் பகுதியில் கொலை செய்யப்பட்ட நாய் ரமேஷ் கொலையில் சத்யா முக்கிய குற்றவாளி இருந்துள்ளார். இதையடுத்து அவரை தீர்த்துக் கட்டுவதற்காக நாய் ரமேசின் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக கடந்த 8-ந்தேதி நாய் ரமேசின் சமாதியில் சபதம் எடுத்தனர். பின்னர் கொலையாளிகளில் ஒருவரான கிஷோர் தனக்கு தெரிந்த மிசோரம் அழகியான ஜுலியை பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளார். சத்யாவுடன் அவரை பழக வைத்து ஸ்கெட்ச் போட்டு கொலையாளிகள் தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள்.
மிசோரம் அழகிக்கு ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஆசைகாட்டி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
நாய் ரமேஷ் கொலை சம்பவத்துக்கு பிறகு சத்யா புழல் காவாங்கரையில் இருந்து தண்டையார் பேட்டை பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளார். இருப்பினும் சத்யாவை கொலை செய்ய அவரது ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் சத்யாவின் செல்போன் எண் கிஷோருக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து அவரது இன்ஸ்ட்ராகிராம் ஐ.டி.யை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அந்த ஐ.டி.யை வைத்தே சத்யாவை சிக்க வைப்பதற்கு சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
இதன்படி கிஷோருக்கு நன்கு அறிமுகமான மிசோரம் அழகி ஜுலியை பயன்படுத்தியுள்ளனர்.
சத்யாவின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை ஜுலியிடம் கொடுத்த கிஷோர், சத்யா எனக்கு பணம் தர வேண்டியுள்ளது. நான் அழைத்தால் வரமாட்டான். எனவே நீ அவனிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி நேரில் வரவழைக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் உனக்கு ரூ.1 லட்சம் பணம் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்தே சத்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஹாய்' என அழைத்து அழகி ஜுலி பேச தொடங்கியுள்ளார். அப்போது தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதில் மயங்கிய சத்யாவிடம் நேரில் சந்திக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார்.
இதன்படி தண்டையார் பேட்டையில் இருந்து மோட்டார்சைக்கிளில் எழும்பூருக்கு வந்த சத்யா நீண்ட நேரமாக காத்திருந்து விட்டு ஜுலியிடம் நீ வருவதற்கு தாமதமாகிறது. இன்னொரு நாள் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அப்போது ஜுலி இன்னும் சிறிது நேரத்தில் நான் வந்து விடுவேன். நீ ஏதாவது சாப்பிடு என்று கூறி இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த சத்யா என்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி ஜுலி கிஷோரிடம் கூறி ரூ.1000 அனுப்பச் சொல்லி அந்த பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக சத்யாவின் செல்போனுக்கு அனுப்பி வைத்து விட்டு கிஷோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிஷோர் உள்ளிட்ட கொலையாளிகள் சம்பவ இடத்துக்கு வந்து சுற்றி வளைத்து சத்யாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக செல்போன் தொடர்புகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போலீசார் மிசோரம் அழகி ஜுலி உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.