search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murdercase"

    • காதல் தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த வழக்கில் 2 பேருக்கும் 7 ஆண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்ைத சேர்ந்தவர் சுருளிராஜ். இவர் கடந்த 17.10.2013ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அணைக்கரை ப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது23), என்பவர் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி அவரிடம் தகராறு செய்தார். அப்போது சர்ச் தெருவை சேர்ந்த சுகுமார் (20) மற்றும் சுஜாதா (43) ஆகியோரும் அவரை தாக்கி உள்ளனர்.

    மேலும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். படுகாயம் அடைந்த சுருளிராஜ் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கார்த்திக் மற்றும் சுகுமாரை கைது செய்தனர்.

    இந்தவழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் சுகுமாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுகவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு வக்கீலாக விவேகானந்தன், புலன் விசாரணை மேற்கொண்ட போடி இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில்கான் (வயது 22). இவர் பட்டபடிப்பு முடித்து விட்டு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தார். அவரது நண்பர் முகமது சமீரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சமீரின் சகோதரி ஷபானா என்பவருடன் காபில்கான் செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இதனை ஷபானாவின் கணவர் அலாவுதீன் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் வண்டிபேட்டை பகுதியில் காபில்கான் நின்று கொண்டு இருந்தபோது முகமது சமீர் மற்றும் அலாவுதீன் ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் காபில்கானை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டினர். மேலும் உடலில் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய முகமது சமீர், அலாவுதீன், ஷபானா ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

    • உண்மை கண்டறியும் சோதனையில் துப்பு துலங்கியதா?
    • சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. விளக்கம்

    திருச்சி, 

    தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அதி–காலையில் நடைபயற்சி சென்றபோது மர்ம நபர்க–ளால் கடத்தி கொலை செய் யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி–னர். பின்னர் பின்னர் சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் எந்த துப்பும் துலங்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கு பயன்படுத்திய காரினை அடிப்படையாகக் கொண்டு கார் டிரைவர்களிடம் விசா–ரணை நடத்தப்பட்டது.

    பின்னர் ராமஜெயம் கொலை வழக்கில், தொடர் புடையதாக கருதப்படும் சாமி ரவி, திலீப், சிவா, சத்யராஜ் ராஜ்குமார், தென்கோவன் உள்ளிட்ட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்டது.இந்த நிலையில் ராமஜெ–யம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக உண்மை கண்டறியும் சோதனையில் 11 ரவுடிகள் தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதாகவும், திலீப் என்ற ரவுடி மட்டும் உண்மையை கூறியதாகவும் தகவல் வெளியாகியது.இதுகுறித்து சிறப்பு புல–னாய்வுக்குழு எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதா–வது:-உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிக் கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த சோதனை அறிக்கை எங்களுக்கு வந்து சேரவில்லை. அந்த அறிக்கை வந்தால் தான் எதுவும் சொல்ல முடியும். யூகங்களுக்கு பதில் அளிக்க இயலாது என்றார்.

    ×