என் மலர்
நீங்கள் தேடியது "குற்றம்"
- கார் டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மகளால் ஆத்திரம்!
- கார் டிரைவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததால் பழிக்கு பழி நடந்த கொலை?
சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், டிரைவர் பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.
இந்தநிலையில் டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் போலீசார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.
பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சூர்யா, ஜோதிகா, ரோஜா, சத்யன் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் "மாயாவி." இந்தப் படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்தவர் விஷ்ணு பிரியா. இந்தப் படம் விஷ்ணு பிரியாவுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவர் திரைத்துறையில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தின் போது, விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனை ஐந்து பேர் கும்பல் நாற்காலியில் அமர வைத்து கட்டிப்போட்டு முகத்தை டேப்பால் சுற்றியுள்ளனர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சூரிய நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் சிசிடிவி, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை ஐந்து பேர் கும்பல் திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
- இறந்தவர் அவரது கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் வெட்டி கொலை செய்யபட்டதாக ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனது டீக்கடை முன்பு இடையூறு அளிக்கும் வகையில் மது போதையில் இருந்தவர்களைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காலை முழுவதும் தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மதுரை போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று 06.02.2026-ம் தேதி தனசேகரபாண்டியன் என்ற செந்தில் 35, த/பெ முத்து சேர்வை, சாமநத்தம் கிராமம், மதுரை என்பவர் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சாமநத்தம் நெடுங்குளம் மெயின் ரோடு, அரசு உயர்நிலைப்பள்ளி அருகே செல்வராஜ் என்பவருடைய காம்பளக்ஸில் உள்ள மேற்படி இறந்த தனசேகரபாண்டியன் செந்தில் என்பவரது டீ கடையின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் வெட்டி கொலை செய்யபட்டுள்ளார்.
மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக இன்று 06.02.2026 தொலைக்காட்சிகளில் அவரது டீ கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் கொலை செய்யபட்டதாக செய்திகள் ஒளிபரப்பபட்டு வருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் இறந்த நபரின் குடும்ப பிரச்சனையினால் அடையாள தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டடுள்ளார் என்பது தெரியவருகிறது.
இறந்தவர் அவரது கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் வெட்டி கொலை செய்யபட்டதாக ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது. இச்சம்பவம் அவரது குடும்ப பிரச்சனையின் காரணமாக நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் சட்டப்படி உடனடி மற்றும் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விபரம் தெரிவித்து கொள்ளபடுகின்றது." என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறோம்
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில், முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் (58) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் (IAF) இருந்து ஓய்வு பெற்ற யோகேஷ், தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அசோக் விஹார் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று உள்ளூர் சந்தையில் இருந்து யோகேஷ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் உடல் ரீதியாக தாக்கி, அவரது தலையில் சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், யோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார் என உ.பி. போலீசார் தெரிவித்தனர்.
"திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறோம். மேலும் விசாரணைக்காக அருகிலுள்ள கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளோம்," என ஏசிபி லோனி சித்தார்த்த கௌதம் தெரிவித்துள்ளார்.






