என் மலர்
நீங்கள் தேடியது "Cinema"
- நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான்.
- காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகன் கெளஷிக் உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை கெளஷிக் கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் கெளஷிக் அடிக்கிறார்.
இறுதியில் கெளஷிக் அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கெளஷிக், காதல், கோபம் என நடிப்பில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஆரா, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், நடனம் என தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
பிராணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
நட்பு, உறவு, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். இதில் காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வழுவில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.
அகமது விக்கியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மாலைமலர் ரேட்டிங் : 2 / 5
- விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
- தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தலைவன், தலைவி படத்திற்கு பின் பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இப்படத்தில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா இணைந்தனர். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரம்மாஜி, துனியா விஜய் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்பு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், சிலகாரணங்களால் வெளியிடப்படவில்லை. விரைவில் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது
- மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'பாம்'. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சூப்பர் ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
- ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களிடையே பேசிய கவின்,
"ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
- நடிகை துளசி பண்ணையாரும், பத்மினியும் படத்தின்மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
- ஷீரடி சாய்பாபாவுடன் நிம்மதியான பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்
பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருகிறார்.
இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதையை தலைமுறையினருக்கு தெரியவேண்டுமானால் பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கூறலாம். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் கன்னட நடிகர் சிவமணியை திருமணம் செய்துகொண்டார். கடந்த வாரம் வெளியான லவ் ஓடிபி படத்தில் நடித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என தெரிவித்துள்ளார்.
- முன்னதாக நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசனுக்கு (2016) வழங்கப்பட்டது.
- சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
வரும் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
- அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள 'அதிரடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது.
- கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
- வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.
அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
- ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை.
- கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். வக்கீல். இவரது மனைவி ராஜாத்தி. கடந்த 6-ந் தேதி வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர், ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1½ பவுன் நகைகளை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் தங்கி சினிமாவில் மேக்கப்மேனாக வேலை பார்த்து வந்த அவர் போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
- செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்:
செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார். நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதாநாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நாளை 29-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மைகளை கொண்டு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.






