என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinivasan"

    • நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    • மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

    தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?

    துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர்  ஆண்டோ  ஜோசப்  மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.

    அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.

    ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.  

    • 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
    • தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

    மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்

    தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.

    என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

    நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

    • எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
    • ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

    கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.

    ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். 

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.

    நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

    ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.   

    • இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
    • தமிழில் வெளியான “லேசா லேசா” படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

    மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே உள்ள பாட்டியம் பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீனிவாசன், 1977-ம் ஆண்டு "மணி முழக்கம்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இல்லத்தரசியின் மகனான இவர் பொருளாதாரம் இளங்கலை பட்டதாரி ஆவார்.

    சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்பட பயிற்சி பெற்றவர். அவர் நடித்த முதல் படத்திலேயே தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

    அதன்பிறகு மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவின் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவரானார். 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

    மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

    தமிழில் வெளியான "லேசா லேசா" படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அவரது முக பாவணை மற்றும் நகைச்சுவை பேச்சு, அந்த படத்தில் இறுதிவரை ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கும். பாரதிராஜாவின் "ரெட்டச்சுழி" படத்திலும் நடித்திருக்கும் அவர் அப்போதே தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

    தனது தனித்துவமான நகைக்சுவை நடிப்பின் மூலம் மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீனிவாசன், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் உதயம்பேரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்றார்.

    டயாலிசிஸ் சிகிச்சைக்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த படி இருந்துள்ளார். இந்தநிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுனித்துராவில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை 8.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மறைவு மலையாள திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஸ்ரீனிவாசனின் மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், "எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்த திரைப்படக் கல்லூரியில் அவர் என் வகுப்புத் தோழர். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.

    • கிழக்கே போகும் ரயில், ஐயா, வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ் சினிமாவில் 1970, 80களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜி.சீனிவாசன்.

    இவர் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கன்னி பருவத்திலே, ராணுவ வீரன், இதயகோவில், ஐயா, நகரம், வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். இவரது மனைவி சினிமாவின் மறைந்த பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா ஆவார்.

    கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சீனிவாசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. சீனிவாசன் உடல், சென்னை அசோக்நகர் இந்திரா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • புதிதாக அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிசாந்த், மண்டால், ரஷித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
    • ஜெர்சி வழங்கும் புகைப்படம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீனிவாசன்- டோனி தலைமையில் புதிய சிங்கங்களுக்கு சிஎஸ்கே ஜெர்சிஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதவுள்ளது. 

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு அவர்களுக்கான ஜெர்சி வழங்கப்பட்டது. இதனை அணி நிர்வாகம் சார்பில் ஸ்ரீனிவாசன், டோனி, ஸ்டீவன் பிளெமிங், காசி விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர். ஜெர்சி வழங்கும் புகைப்படம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.


    அதில் புதிதாக அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிசாந்த், மண்டால், ரஷித் ஆகியோர் அவர்களுக்கான ஜெர்சியை பெற்று கொண்டனர்.

    • விற்கப்பட்ட பங்குகளில் ஸ்ரீனிவாசனின் பங்கு மட்டுமே ரூ.2,656 கோடி மதிப்புடையது ஆகும்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்.

    தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்தவருமான நாராயணசாமி ஸ்ரீனிவாசன் தனது நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்றார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.390 என்ற விலை கொடுத்து மொத்தமாக ரூ.3,954 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை அல்ட்ரா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளதால், நிர்வாகம் கைமாற உள்ளது.

     

    இந்நிலையில் தனது சிஇஓ பதவியிலிருந்து விலகும் ஸ்ரீனிவாசன் நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் உணர்ச்சி பொங்க விடைபெற்றுள்ளார். மேலும் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், 'நிர்வாகம் வேறு கைகளுக்கு மாறுவதால் ஊழியர்கள் யாரும் தயங்கத் தேவையில்லை. இப்போது நம் நிறுவனத்தில் இருக்கும் பாலிசிகளும், நடைமுறைகளும் எந்த விதத்திலும் மாற்றப்படாது என்ற உறுதியை அல்ட்ரா டெக் நிறுவனத்திடம் பெற்றுள்ளேன்' என்று தெரிவித்தார்.

    இந்தியா சிமெண்ட்ஸ்  நிறுவனமானது (ICL) கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யர் மற்றும் டி.எஸ் நாராயண ஸ்வாமி ஆகியோரால் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தந்தை நாராயண ஸ்வாமியின் மறைவுக்குப் பின் தனது 23 வது வயதிலேயே ஸ்ரீனிவாசன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்ட்டராக பொறுப்பேற்றார்.

    அவரது தலைமையில் இந்தியா சிமெண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நாள்வரை அந்த தலைமைப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாசன் தலைமையிலானஇந்தியா சிமெண்ட்ஸ் போட்டி அதிகரித்ததாலும், விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் நிறுவனம் நொடித்துள்ளது. இதனாலேயே ஸ்ரீனிவாசன் பங்குகளை விற்கும் முடிவை எடுத்துள்ளார்.

     

    ஸ்ரீனிவாசனின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியதாகும். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் [ஐ.சி.சி] தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான் பி.சி.சி.ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார். தற்போது ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சிஎஸ்கேவை நிர்வகிக்கக்போகும் நிறுவனம் எது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

     

    • அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி. காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், "உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா?"

    "மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது. உணவக உரிமையாளர் சீனிவாசனை கேவலப்படுத்துவது, கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.

    • நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • அன்னபூர்ணா உணவக உரிமையாளருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்.

    அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து இந்த முன்னேறியுள்ளார்.நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

    • சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்தார்.
    • அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "செப்டம்பர் 11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார்

    இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி

    தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதற்கு மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார்.

    நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த சம்பவத்துக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.

    இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டதாக கூறி சிங்காநல்லூர் மண்டல பா.ஜ.க. தலைவர் சதீஷ், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கையை கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலோடு கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வரும் ஆர். சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஆனால் சதீஷ் தன் மீதான குற்றச்சாட்டை எடுத்துள்ளார். நான் வீடியோ எடுத்து பரப்பவில்லை எனவும், இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சதீஷ் கூறியதாவது:-

    நான் பாரதீய ஜனதாவில் கிளை தலைவரில் இருந்து மண்டல தலைவர் வரை பொறுப்பு வகித்துள்ளேன். கடந்த 31-ந் தேதியே எனது பதவி காலம் முடிந்து விட்டது. முடிந்த பதவியை தான் கோவை மாவட்ட தலைவர் ரத்து செய்துள்ளார்.

    மற்றொன்று அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பது மாநில தலைமையும், தேசிய தலைமையும் தான் செய்வார்கள். அதையும் மாவட்ட தலைவர் செய்துள்ளார்.

    இந்த பிரச்சனையில் வீடியோ எடுத்தது அங்கிருந்த 4, 5 பேர் தான். நான் அந்த வீடியோவையே இதுவரை சரியாக கூட பார்க்கவில்லை. இந்த செயலை யார் செய்திருப்பார்கள் என்ற தகவல் எனக்கு வந்தது. அந்த தகவலை தான் நான் பிறருக்கு அனுப்பினேன். பார்வேட் செய்தது தவறு என்றால் வீடியோ வெளியிட்ட நபர் மீது கட்சி விரோத நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

    மாநில தலைவர் அண்ணாமலை வந்த பிறகு என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சி பணி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
    • அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.

    பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லலித் மோடி, ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறின. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அதை செய்தோம். அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். ஸ்ரீனிவாசனுக்கு பிளின்டாஃப் வேண்டும் என்பதால், நாங்கள் மற்றவர்களிடம் அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்."

    "அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார்," என்று தெரிவித்தார். 

    ×