என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையாள நடிகர்"

    • தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார்.

    1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன்.

    வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரதானமாக நடித்து வந்தார். தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியாக 'சாலக்குடிகாரன் சங்கதி' திரைப்படத்தில் நடித்தார்.

    இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஆலப்புழையில் அவர் உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

    • நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    • மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

    தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?

    துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர்  ஆண்டோ  ஜோசப்  மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.

    அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.

    ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.  

    • எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
    • ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

    கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.

    ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். 

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.

    நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

    ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.   

    • கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத்.
    • இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.

    கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.

    இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. அவரது மகள் கல்லீரல் தானம் செய்ய முன்வந்திருந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு ரூ.30லட்சத்திற்கும் மேல் பணம் தேவைப்பட்டது.

     

    அந்த தொகையை திரட்டும் பணியில் நடிகரின் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஷ்ணு பிரசாத் இறந்தார். அவரது மரணத்தை நடிகர் கிஷோர் சத்யா தனது சமூகவலைதள பதிவின் மூலம் இன்று அறிவித்தனர். நடிகரின் குடும்பத்தினருக்கு மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

    இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

    கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    • 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
    • ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.

    பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.

    இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்



    இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.

    இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-

    மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.




    மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்துடன் ‘வீரம்’ என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா.
    • இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    அஜித்துடன் 'வீரம்' என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா. ரஜினியுடன் அண்ணாத்த, காதல் கிசு கிசு, கலிங்கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்ட பாலாவுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற பெண் மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாலா மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், " என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாக கூறி வருகிறார். அவர் என்னை நேசிக்க சின்ன காரணம் கூட இல்லை. என்னையும், என் அம்மாவையும் குடித்து விட்டு டார்ச்சர் செய்ததுதான் கண் முன் வருகிறது. அந்த நேரத்தில் குழந்தை என்பதால் என்னால் அம்மாவுக்கு உதவ முடியவில்லை. என் மீது உண்மையில் பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கிடாதீங்க" என கூறி இருந்தார்.

    இதற்கு பதிலளித்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், "மகளே என்னை அப்பா என்று அழைத்ததற்காக நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. மகளுடன் வாக்குவாதம் செய்பவன் மனிதனே இல்லை. உனக்கு 3 வயதாக இருக்கும் போது நான் பாட்டிலை வீச முயன்றதாகவும், 5 நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறி இருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்யாமல் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் வர மாட்டேன். நன்றாக படித்து வளர வாழ்த்துக்கள்" என்று கூறி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
    • 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார்.

    மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகர் மேகநாதன் காலமானார். அவருக்கு வயது 60. சுவாசக் கோளாறு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், பிரபல மலையாள நடிகர் பாலன் கே நாயர் மற்றும் சாரதா நாயர் ஆகியோருக்கு மூன்றாவதாக பிறந்தவர். மேகநாதன் 1983 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'அஷ்த்ரம்' மூலம் நடிகராக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். அவரது பன்முகத்தன்மைக்கு அங்கீகாரம் பெற்றார்.

    மேகநாதன் சென்னையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, கோவையில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றார். பின்னர் நடிப்பின் மீதான ஆர்வத்தால் திரைத்துறையில் பணியாற்றினார்.

    மேகநாதனுக்கு மனைவி சுஸ்மிதா மற்றும் மகள் பார்வதி உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள நடிகர் திலீப் சங்கர் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றார்.
    • அங்குள்ள ஹோட்டல் அறையில் திலீப் சங்கர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    நடிகர் திலீப் சங்கர் மலையாளத்தில் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவர் கடந்த 2 நாளுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 2 நாள் அறையிலேயே இருந்த அவர் வெளியே வரவே இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அறையின் உள்ளே சென்று பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. ஹோட்டல் ஊழியர்கள் தாங்களே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். அங்கு திலீப் சங்கர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திலீப் சங்கர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திலீப் சங்கரின் திடீர் மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×