என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்மூட்டி"

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்மூட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸாரின் ஷிஹப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    மம்மூட்டியுடன் மீண்டும் இணைவது குறித்து பேசிய இயக்குநர் அடூர் கோபாலாகிருஷ்ணன் " என்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டியே முக்கிய வேடத்தில் நடிப்பார். மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. திரைக்கதை எழுதும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மையக் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியின் முகம் மட்டுமே என் நினைவுக்கு வந்தது.

    அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். எனது படங்களில் ஆண் கதாநாயகனாக நடிப்பது இது நான்காவது முறையாகும். நான் வேறு எந்த முன்னணி நடிகருடனும் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை". என தெரிவித்தார்.

    இப்படம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மம்மூட்டியை அடூர் உலகிற்குள் கொண்டுவருகிறது. கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான படம் விதேயன் (1994). அடூர் -  மம்மூட்டி கூட்டணியில் வெளியான அனந்தரம் (1987), மதிலுகள் (1989) மற்றும் விதேயன் ஆகியவை மலையாள சினிமாவின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளாகும். 

    நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன்.

    மலையாளத் திரையுலகில் மெகாஸ்டார் என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் மம்மூட்டி உடைய இயற்பெயர் 'முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில்' ஆகும்.

    இந்நிலையில் தனது பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை அவர் பகிர்ந்துள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.

    அப்போது, "நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன். என் உண்மையான பெயர் முகமது குட்டி என்று யாருக்கும் தெரியாது.

    ஒரு நாள், என் ஐடி கார்டு தற்செயலாக பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. இதன் காரணமாக, எனது உண்மையான பெயர் முழு கல்லூரிக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.

    அந்த நேரத்தில், அவரது நண்பர்களில் ஒருவரான சசிதரன், ஐடி கார்டில் 'முகமது குட்டி' என்ற பெயரை 'மம்மூட்டி' என்று தவறாகப் படித்ததாகக் கூறினார்.

    எனவே, "அவர் தவறாகப் படித்த பெயர் பின்னர் எனக்குப் பொருத்தமாகிவிட்டது" என்று மம்மூட்டி சிரித்தபடி கூறினார்.

    இந்த சந்தர்ப்பத்தில், அவர் தனது நண்பர் சசிதரனை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரஜினியின் குசேலன் படம் போல நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

    • க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.

    மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிரம்மயுகம்' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே.ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்துள்ள படம் 'களம் காவல்'. க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.

    இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் 'களம் காவல்' நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், 'களம் காவல்' படம் நாளை வெளியாகாது என்றும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என்றும் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


    • படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.
    • நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

    குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் உருவாகி உள்ளது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ளது.

    அண்மையில் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .

    இப்படம் நவம்வர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

    • நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
    • இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
    • பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பதிவில், "சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தைக் கொண்டு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மம்மூட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
    • பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் மம்மூட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.  

    லோகா திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இத்திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

    படத்தின் மூத்தோன் என்ற கதாப்பாத்திரம் இருக்கிறது. அவர்தான் அனைவருக்கும் லீடர் போல் இருக்கிறார். ஆனால் இவரது முகத்தை படத்தில் காட்ட மாட்டார்கள். இந்நிலையில் மூத்தோன் கதாப்பாத்திரம் நடிகர் மம்மூட்டி தான் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மம்மூட்டியை வாழ்த்தி படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    • மம்மூட்டி சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.
    • ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மம்மூட்டி சில உடல்நிலை காரணங்களால் 7 மாத காலம் சிகிச்சையில் இருந்து சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.

    மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுவரை பார்த்திராத கதாப்பாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வில்லத்தனமான சிரிப்பு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.

    • நடிகர் மம்மூட்டி கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.
    • இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார்.

    நடிகர் மம்மூட்டி கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். ரமலான் பண்டிகையில் இருந்தே அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளவில்லை.

    இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பல லட்ச ரசிகர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பராக நடிகர் மோகன்லால் சபரிமலையில் அவருக்காக அர்ச்சனை செய்திருந்தார் அச்செய்தி மிகவும் வைரலானது.

    அதைத் தொடர்ந்து, அவர் உடல்நலம் குணமாகி மீண்டும் படப்பிடிப்புகளுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் இணையத்தில் பரவி வந்தது.

    இதனை உறுதிபடுத்தும் வகையில் அனைவரும் மம்மூட்டியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கம் பேக், வெல்கம் பேக் என மனதார வாழ்த்துக்களை பதிவிட்டனர்.

    மம்மூட்டியின் உடல்நிலை தொடர்பாகவும், சிகிச்சையின்போது எப்படியான விஷயங்களை அவர் கடந்து வந்தார் என்பது குறித்து, அவருடைய நண்பரும், நடிகரும், எழுத்தாளருமான வி.கே.ஶ்ரீராமன் பேசியிருக்கிறார்.

    வி.கே.ஶ்ரீராமன், "சிகிச்சையின் ஆரம்பக் கட்டங்களில், அவர் உணவின் சுவை தெரியவில்லையெனவும், மணம் உணரும் திறனை இழந்துவிட்டதாகவும் கூறினார்.

    இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார்.

    மம்மூட்டி அவரே தொலைப்பேசியில் அழைத்து, தான் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறினார்.

    அவரது குரலில் ஒருபோதும் பலவீனத்தின் அறிகுறி இருந்ததில்லை. அவர் பேசும்போது ஒரு நோயாளியின் குரல் போலவே இல்லை.எப்போதும் இருக்கும் அதே வலிமை, அதே ஆற்றல் இப்போதும் இருக்கிறது. அவர் என்னைத் தொடர்ந்து அழைத்துப் பேசுகிறார்." என கூறியுள்ளார்.

    • குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மம்மூட்டியின் அடுத்த திரைப்படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    • மம்மூட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    • பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், மம்மூட்டி.

    73 வயதானாலும், அது தெரியாத அளவுக்கு இளம் கதாநாயகர்களுக்கே 'டப்' கொடுத்து நடித்து வருகிறார்.

    மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக ஜொலிக்கிறார். குறிப்பாக ரசிகைகளுக்கு பிடித்த நடிகராக வலம் வருகிறார்.

    சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் மம்மூட்டிக்கு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் 'மலையாள சினிமாவின் வரலாறு' என்ற பெயரில் மம்மூட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இது மம்மூட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    ×