என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளபதி"

    • அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார்.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் விழா நடைபெற்றது.

    இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாக்யராஜை வெகுவாக பாராட்டினார். இதற்கிடையே பாக்யராஜ் நேர்காணல் ஒன்று பங்கேற்று பேசியுள்ளார். அதில் ரஜினியின் தளபதி படத்திற்கு தான் யோசித்த வேறு மாதிரியான கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.

    1991 இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி திரைப்படம் வெளியாகி கிளாசிக் அந்தஸ்து பெற்றது அனைவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் துரியோதனன், கர்ணன் நட்பை இன்ஸபிரேசனாக கொண்டு அர்ஜுனனாக அரவிந்த் சாமியை வைத்து தளபதி கதையை மணிரத்னம் அமைத்திருப்பார்.

    இந்த படத்தின் தாதா மம்மூட்டி தனக்கு இடையூறு தரும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என தனது உயிர் நண்பன், தளபதி ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்மூட்டி இவ்வாறு சொல்வதற்கு முன் ரஜினி தனது தாயை சந்தித்து, அரவிந்த் சாமி தனது தம்பி என்பதை அறிந்துகொள்வார்.

    எனவே மம்மூட்டி கேட்கும் போது தன்னால் கொலை செய்ய முடியாது என ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி, எனது உயிரை எடுத்துக்கோ, நான் உன் உயிர் நண்பன் ஆனால் அவனை கொல்ல சொல்லாதே என மம்மூட்டி இடம் கூற, ரஜினியின் நட்பை பார்த்து அவர் பூரித்துப்போவார்.

    நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என அரவிந்த் சாமியை பார்க்க இருவரும் போக, வில்லன் அந்நேரம் வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மமூட்டி ரஜினியின் கண் முன்னேயே உயிரிழப்பார். இது கதை.

    நேர்காணலில் பாக்கியராஜ் கூறியதாவது, தளபதி படம் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி, அவனை கொல்ல முடியாது என ரஜினி செல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பது விழுந்துவிடுகிறது.

    மம்மூட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.

    ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மாமூட்டியிடம் சொல்ல, மம்மூட்டி தனது நண்பன் தனக்காக தம்பியையே கொல்ல சென்றிருக்கிறான் என நெகிழ வேண்டும்.

    ரஜினியை தடுக்க மம்மூட்டி கிளம்ப வேண்டும். மம்மூட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்த் சாமியை கொன்றுவிடுவாரா, அல்லது மம்மூட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்பவர்களிடையே ஏற்படும்.

    இதை ஏன் மணிரத்னம் யோசிக்கிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸை அவரிடம் கூறினேன்.

    அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கதபாத்திரம் அந்த இடத்தில் சட்டென விழுந்துவிட்டதே என்று தோன்றியது என்று ரஜினியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.  

    ஜனநாயகன் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    ஜனநாயகன் முதல் பாடல் இன்று (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு நேற்று முன்தினம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் அந்த பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகிறது என கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

    இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
    • தனது வழக்கமான ஸ்டைலில் அவர் கூறிய கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மிகவும் மாஸாக உரையாற்றினார். மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்பொழுது ஒரு குட்டி கதை ஒன்றை கூறினார்.

    தனது வழக்கமான ஸ்டைலில் அவர் கூறிய கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இது தொடர்பாக விஜய் பேசுகையில், "ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்க பலமாக இருக்க ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகின்றனர். அதில் ஒருவர் தான் தேர்வாக வேண்டும். ஆனால் 10 பேர் தேர்வாகியிருப்பதால், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அவர்களிடம் 3 மாதத்தில் ஒரு விதையை கொடுத்து அதை நன்றாக வளர்த்து கொண்டு வாருங்கள் என அனுப்புகிறார். 3 மாதம் கழித்து வரும்போது, அதில் ஒருவர் அந்த விதை நெல்லை ஆளுயரத்துக்கும், மற்றொருவர் தோள் உயரத்துக்கும் என 9 பேர் நன்றாக வளர்த்து கொண்டு வந்தனர்.

    அதில் ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வந்தார். என்ன என கேட்டபோது, 'நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன். நெல் வளரவேயில்லை' என்றார். உடனே ராஜா அவரை கட்டியணைத்து நீ தான் என்னுடைய தளபதி, எல்லா அதிகாரமும் உனக்கு தான் என்றார். காரணம் 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது ஒருபோதும் முளைக்காது. அப்படி நீங்கள் எந்த தளபதியை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். தலைவனுக்கு முக்கியமான அடிப்படை உண்மையாக இருப்பது" என கூறினார்.

    • கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    • முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.
    • இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.


    இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதிலும் நடிகர் ரஜினியின் படங்கள் அசால்ட்டாக ரூ.100 கோடி வசூலை குவித்து ஹிட் அடிக்கும். இதன் மூலம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ரஜினி தக்க வைத்து கொண்டிருக்கிறார்.


    இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் , அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நேரத்தில் விஜய் நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், படத்தின் பிரீ பிசினஸுக்கும் வழியை அமைத்தது. இந்த நேரத்தில் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.


    இதைத்தொடர்ந்து திரை ஆர்வலர்கள் பலர் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்று கூறத் தொடங்கினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இந்த சர்ச்சை விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் விதமாக இருவரின் படங்களிலும் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.


    இந்த சர்ச்சையானது இதோடு முடியாமல் பிரபலங்கள், தலைவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கும் வகையில் பேசப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளை உள்ளடக்கிய "சூப்பர் ஸ்டார்" பட்டம் யாருக்கு என்பது ஒரு முடிவில்லா பிரச்சனையாக தொடர்கிறது...

    • சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.
    • 1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூல் குவிக்க, ‘குணா' அப்போட்டியில் சறுக்கியது.

    அண்மையில் வெளியான மலையான திரைப்படமான `மஞ்சுமேல் பாய்ஸ்' தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா' குகையை மையப்படுத்தியதுதான். அதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.

    1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, 'தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் 'தளபதி' வசூல் குவிக்க, 'குணா' அப்போட்டியில் சறுக்கியது. எனினும், 25 ஆண்டுகள் கழித்தும் குணா படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அதனை 'கல்ட்' கிளாசிக் படமாக மாற்றியுள்ளது.

    'குணா' படத்தில் வரும் குகை குறித்து 1991ல் நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், "கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் இயக்குநர் சந்தானபாரதியும் 7 கி.மீ அலைந்தும் திருப்தியான இடம் அமையவில்லை.

    'இன்னும் 1 கி.மீ போய் பார்ப்போமே' என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது. அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே அமைத்தோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது" என்று கமல் பேசியிருப்பார்

    • மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    வெங்கட் பிரபு தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான விசில் போடு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிக வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார்.
    • ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.

    இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனெரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 உடன் முடிவடையும் நிலையில் அன்றைய தினம் புதிய தளபதியாக உபேந்திரா பதவியேற்பார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    தற்சமயம் ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார். கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படையணியை வழிநடத்தியுள்ளார்.

    மேலும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அசாம் ரைபிள்ஸ் படைக்கு கமாண்டராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும் பணியாற்றியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.

     

    இந்நிலையில்தான் இந்திய ராணுவத்தின் 30 வது தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா வரும் 30 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். முன்னதாக தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் விமானப்படை துணைத் தளபதியாக உள்ளார்
    • தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி பணி பெறுகிறார்

    இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அன்றைய தினம் விமானப்படை தளபதி பதவியை அமர் ப்ரீத் சிங் ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    1984 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் சேவை ஆற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 2023 பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருபவர் ஆவார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் [NDA] பயின்ற அமர் ப்ரீத் சிங் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங் - களையும் வகித்தவர் ஆவார்.

    • இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன்.
    • அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தற்பொழுது சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இன்று திருச்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில். சிவகார்த்திகேயனிடம் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரிடம் கூறிய வசனங்களை பற்றிக் கேட்டார்.

    அதற்கு அவர், அந்த திரைப்படத்தில் நடித்ததுற்கு பெருமை படுகிறேன். விஜய் சாருக்கும், வெங்கட் பிரபு சாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள்தான் அடுத்த தளபதி என கூறினார்.

    அதற்கு சிவகார்த்திகேயன் " அதெல்லாம் கிடையவே கிடையாது என்றும் ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார்" என்று பதிலளித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
    • கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைஃப்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

    1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தளபதி' படம் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஆக்ஷன், காதல் சென்டிமெண்ட் ஆகியவை கொண்ட கிளாசிக் படமான 'தளபதியி'ல் மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமும் இதுவே ஆகும். ரஜினி மற்றும் மணி ரத்னம் கூட்டணி மீண்டும் இணையுமா என்று நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.



    இந்நிலையில், தற்போதைய தகவலின் படி ரஜினிகாந்த்- மணிரத்னம் ஆகியோர் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படம் குறித்தான அறிவிப்பு ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

    இதற்கிடையே ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. மறுபுறம் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைஃப்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி மற்றும் அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தளபதி திரைப்படம்.
    • இவர்களுடன் ஜெய்ஷங்கர்,அம்ரிஷ் புரி, ஸ்ரீவித்யா, ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    1991 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி மற்றும் அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தளபதி திரைப்படம். இப்படத்தில் இவர்களுடன் ஜெய்ஷங்கர்,அம்ரிஷ் புரி, ஸ்ரீவித்யா, ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இளையராஜா  இசையில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றும் பல ரீல்ஸ்களில் நாம் பார்த்து வருகிறோம்.

    இன்னும் நட்புக்கு ஒரு எடுத்துக் காட்டாக சூர்யா மற்றும் தேவா கதாப்பாத்திரங்களை குறிப்பதுண்டு. இந்நிலையில் இத்திரைப்படம் ரஜினிகாந்தின் 74- வது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் 4K டிஜிட்டல் வெர்ஷனில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரிரீலிஸ் செய்யப்படவுள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன.

    ரஜினி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×