என் மலர்
நீங்கள் தேடியது "Super Star"
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் அல்ல.. நெல்சன் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் கதை வன்முறை நிறைந்து இருப்பதால் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், நெல்சன் கூறிய கதைக்கு அவர் கிரீன் சிங்னல் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர்2 படத்திற்குப் பிறகு, நெல்சன் படப்பிற்கு முந்தைய பணிகளை தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் சுந்தர்.சி இயக்கும் படத்திலும், கமல்ஹாசன் அன்பறிவ் படத்திலும் நடிக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
- நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நடிகர் ரன்பீர் கபூர் மறுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, "நான் ஆடியோ டீசரில் 'சூப்பர் ஸ்டார்' என்ற டேக்கை இணைத்திருந்தேன் இதை பார்த்த ரன்பீர் அந்த டேக்கை எடுக்கும் படி கூறினார்.

ஆனால், நான் இது என்னுடைய உணர்வு என்று ரன்பீரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் ஒன்றாக வேலை பார்த்த மூன்று வருடங்களில் ரன்பீர் இதை மட்டும் தான் மறுத்துள்ளார். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் நான் செய்வேன் என்று அந்த டேக்கை இணைத்தேன்" என கூறினார்.

மேலும், "நான் ரன்பீர் கபூரின் பல படங்களை ஹைதராபாத்தில் பார்த்திருக்கிறேன். அவரை கொண்டாடும் ரசிகர்களை பார்த்திருக்கிறேன். ஒரு நட்சத்திரத்திற்கு மட்டுமே அந்த வரவேற்பு கிடைக்கும். ரன்பீருக்கு 'சூப்பர் ஸ்டார்' டேக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னிடம் ஏன் அந்த டேக்கை கொடுத்தோம் என்று கேட்கவில்லை" என்று கூறினார்.
- ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.
- இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.

இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதிலும் நடிகர் ரஜினியின் படங்கள் அசால்ட்டாக ரூ.100 கோடி வசூலை குவித்து ஹிட் அடிக்கும். இதன் மூலம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ரஜினி தக்க வைத்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் , அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நேரத்தில் விஜய் நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், படத்தின் பிரீ பிசினஸுக்கும் வழியை அமைத்தது. இந்த நேரத்தில் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.

இதைத்தொடர்ந்து திரை ஆர்வலர்கள் பலர் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்று கூறத் தொடங்கினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இந்த சர்ச்சை விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் விதமாக இருவரின் படங்களிலும் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.

இந்த சர்ச்சையானது இதோடு முடியாமல் பிரபலங்கள், தலைவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கும் வகையில் பேசப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளை உள்ளடக்கிய "சூப்பர் ஸ்டார்" பட்டம் யாருக்கு என்பது ஒரு முடிவில்லா பிரச்சனையாக தொடர்கிறது...

#PettaBirthdayTrEAtSER Tomorrow at 11am !
— Sun Pictures (@sunpictures) December 11, 2018
@Rajinikanth@karthiksubbaraj@anirudhofficial@VijaySethuOffl@Nawazuddin_S@SimranbaggaOffc@trishtrashers@lyricist_Vivek@DOP_Tirru@sureshsrajan@PeterHeinOffl@vivekharshan@sonymusicsouthpic.twitter.com/9aYF7QYigp






