என் மலர்
நீங்கள் தேடியது "Rajamouli"
- மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
- வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
மகேஷ் பாபுவின் 25வது படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, "எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அதை கேட்டு நினைத்து எனக்கு கோபம் வந்தது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது" என்று தெரிவித்தார்.
இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக வாரணாசி டீசரில் இந்து தொன்மம் குறித்த காட்சிகள் இடமபெட்ருந்த நிலையில், வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் அனுமனை வமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக 'ராஷ்ட்ரிய வானரசேனா' என்ற அமைப்பு ராஜமௌலி மீது ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
வாரணாசி பட விழாவில் ராஜமௌலியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
- பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்தும் படி ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர்.
- தனிப்பட்ட தகவல்களை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
பைரசி இணையதளங்களின் வழியாக பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த கும்பலின் தலைவனை ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கும்பலின் தலைவன் ரவி இமாண்டியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
65 இணையதளங்களின் வழியாக சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரவி சுமார் ரூ 20 கோடி வரை சம்பாதித்துள்ளார்.
சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் பயனர்களிடம் பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்தும் படி ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர்.
இந்த ஆப்களை பதிவிறக்கம் செய்யும் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் , வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவற்றை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பைரசி குறித்து பேசிய இயக்குநர் ராஜமவுலி, "புதுப்படங்களை இலவசமாக பார்க்கலாம் என பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்கிறார்கள். இங்கு எதுவும் இலவசம் கிடையாது. உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடி அதன்மூலம் அவர்கள் பணம் ஈட்டுகிறார்கள். Ibomma தளம் வைத்திருந்தவரை கைது செய்திருக்கலாம். ஆனால் இதே போல இன்னும் பல தளங்கள் உள்ளன. பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு" என்று தெரிவித்தார்.
- படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
- இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
ஐதராபாத்:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது
ஏற்கனவே மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேசுகையில் தனது மறைந்த தந்தை நடிகர் கிருஷ்ணாவை நினைவு கூர்ந்தார்.
புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார்.
இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன்.
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.
இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு.
இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன்.
வாரணாசி படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும் என தெரிவித்தார்.
- மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
- இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் உருவாகி வருகிறது.
- ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தற்போது SSMB29 என்று அழைக்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாரணாசி அல்லது ஜெனெரேஷன் 63 (Gen 63) என இப்படத்திற்கு பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது.
- 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் மகேஷ்பாபுவை தொடர்ந்து ராஜமவுலியுடன் அல்லு அர்ஜூன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக ராஜமௌலி வலம்வருகிறார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டியது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் (சுமார் 500 கோடி ரூபாயை தாண்டி) எடுக்கப்பட்டது.
தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கு வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்டாததால் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. பிரமாண்ட இயக்குனர், முன்னணி கதாநாயகன் இணைவதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் என்பதால் இரண்டு பகுதியாக வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்த நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது இரண்டு பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. 120 நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டால், தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைக்கும்.
படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்தார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் மற்றும் பல முன்னணி நகடிர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
- தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி.
- இயக்குநர் ராஜ மௌலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா.
தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி. இவரது தந்தை மற்றும் மிகச்சிறந்த பாடலாசிரயராவார் சிவ சக்தி தத்தா. இவர் இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92 ஆகும்.
திரைக்கதை எழுத்தாளரான விஜயந்திர பிரசாத்தின் மூத்த சகோதரர் மற்றும் இயக்குநர் ராஜ மௌலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா.
இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பாகுபலி, RRR, மகதீரா, ராஜன்னா மற்றும் ஸ்ரீ ராமதாசு போன்ற படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு சந்திராஸ் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவரது பாடல் வரிகள் கலாச்சார செழுமை மற்றும் தத்துவ ஆழம் கொண்டுள்ளாத இருக்கும். இவரது இறப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை சார்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
அவரது இறுதி சடங்கு இன்று மாலை ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.
- ராஜமௌலி பழைய பாணி செட் அமைக்கும் முறைக்கு திரும்பி உள்ளார்.
- இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் இந்தியா இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிண் 29வது படத்தை இயக்கி வருகிறார்.
இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்திற்காக ரூ.50 கோடி செலவில் பிரம்மாண்டமான காசி நகர செட் ஒன்றை ஐதராபாத்தில் உருவாகி வருகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் ரூ.50 கோடி செலவில் தனி ஒரு செட் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
VFX மற்றும் CGI தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் நிலையில், நம்பகத்தன்மைக்காகவும், படப்பிடிப்புக்காக அடிக்கடி பயணங்களைத் தவிர்க்கவும் ராஜமௌலி இந்த பழைய பாணி செட் அமைக்கும் முறைக்குத் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
- டூரிஸ்ட் ஃபேமிலி படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இன்றும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். இப்படத்தில் மனதைத் தொடும் காட்சிகளும் எலும்புகளை கூச வைக்கும் நகைச்சுவையும் நிறைந்துள்ளது.. இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. அபிஷன் ஜீவின்ந்த் சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுவபம் கொடுத்ததற்கு நன்றி. இப்படத்தை திரையரங்குகளில் தவறவிடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலிக்கு டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், "இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. அவருடைய படங்களை நான் வியந்து பார்த்தேன். அந்த உலகங்களை உருவாக்கிய ஒருவர் ஒரு நாள் என் பெயரைப் கூறுவார் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. ராஜமவுலி சார் நீங்கள் இந்த பையனின் கனவை வாழ்க்கையை விடப் பெரியதாக்கிவிட்டீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி.
ஆஸ்கார் அகாடமி 2028 ஆம் ஆண்டில் தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஸ்டண்ட் கலையை அங்கீகரித்து அதற்கு அதிகாரப்பூர்வ விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆஸ்கர் குழு, ஸ்டண்ட் வடிவமைப்பு எப்போதும் திரைப்படங்களின் மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
இப்போது, அவை ஆஸ்கார் விருதுகளின் ஒரு பகுதியாகும். 2028 ஆம் ஆண்டில் 100வது ஆஸ்கார் விருதுகளுடன் இந்த பிரிவு தொடங்கப்படும். அதில், 2027 இல் வெளியான படங்களில் சிறந்த ஸ்டன்ட் வடிவமைப்புகுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆஸ்கார் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யங் ஆகியோர் கூட்டாகக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.
இந்த தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சிறந்த பணிகளைப் போற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அடைவதில் அவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த RRR படமும் இடம்பெற்றுள்ளது.
இதை முன்னிட்டு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, 'இறுதியாக!' 100 வருட காத்திருப்புக்குப் பிறகு! 2027 இல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கார் ஸ்டண்ட் வடிவமைப்புப் பிரிவுக்காக உற்சாகமாக இருக்கிறேன்.
இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி. ஸ்டண்ட்களின் சக்தியைப் பாராட்டியதற்காக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது 'RRR' படத்தின் அதிரடி காட்சிகள் அறிவிப்பில் பிரகாசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ஆர்.ஆர்.ஆர்
இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. இந்த விழா 2023-ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






