என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்கார் விருது விழா"

    • சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.
    • இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி.

    ஆஸ்கார் அகாடமி 2028 ஆம் ஆண்டில் தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஸ்டண்ட் கலையை அங்கீகரித்து அதற்கு அதிகாரப்பூர்வ விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆஸ்கர் குழு, ஸ்டண்ட் வடிவமைப்பு எப்போதும் திரைப்படங்களின் மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.

    இப்போது, அவை ஆஸ்கார் விருதுகளின் ஒரு பகுதியாகும். 2028 ஆம் ஆண்டில் 100வது ஆஸ்கார் விருதுகளுடன் இந்த பிரிவு தொடங்கப்படும். அதில், 2027 இல் வெளியான படங்களில் சிறந்த ஸ்டன்ட் வடிவமைப்புகுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    ஆஸ்கார் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யங் ஆகியோர் கூட்டாகக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.

    இந்த தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சிறந்த பணிகளைப் போற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அடைவதில் அவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,  ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த RRR  படமும் இடம்பெற்றுள்ளது.

    இதை முன்னிட்டு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, 'இறுதியாக!' 100 வருட காத்திருப்புக்குப் பிறகு! 2027 இல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கார் ஸ்டண்ட் வடிவமைப்புப் பிரிவுக்காக உற்சாகமாக இருக்கிறேன்.

    இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி. ஸ்டண்ட்களின் சக்தியைப் பாராட்டியதற்காக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது 'RRR' படத்தின் அதிரடி காட்சிகள் அறிவிப்பில் பிரகாசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.' என்று தெரிவித்துள்ளார். 

    30 ஆண்டுகளுக்கு பிறகு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #Oscars2019
    வாஷிங்டன்:

    ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.



    யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

    இந்த நிலையில், 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Oscars2019 
    ×