search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ceremony"

    • 14-வது பட்டமளிப்பு விழா, பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜன் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கிருமாம்பாக்கம் விநாயக மிஷன் செவிலியர் கல்லூரி 14-வது பட்டமளிப்பு விழா, பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் கவுரவ விருந்தினராக விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

    சென்னை உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் காஞ்சனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் 55 பேருக்கும் முதுகலை மாணவர்கள் 18 பேருக்கும், போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் 17 பேருக்கும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இளங்கலை படித்த 25 பேருக்கும் பட்டம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜன் வரவேற்றார்.

    விநாயக மிஷன் புதுச்சேரி வளாகத்தில் நிர்வாக தலைமை அதிகாரி டாக்டர் கோட்டூர், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் ராகேஷ் செகல், இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் கோரகுருவில்லா, மருத்துவக் கல்வி பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி, இணை பதிவாளர் பெருமாள் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா ரமேஷ் நன்றி கூறினார்.

    • உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியும், நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
    • 7 நாட்கள் நடந்த விழிப்புணர்வு யாத்திரை நிழச்சிக்கான ஏற்பாடுகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்களின் பயன்பாடுகளை பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடு தழுவிய பிரச் சரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் பகுதியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியும், நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில், ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், குடிமை பொருள் வழங்கல் துறை துணை தாசில்தார் ஐயனார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரியாங்குப்பம் கொம்யூனில் 7 நாட்கள் நடந்த விழிப்புணர்வு யாத்திரை நிழச்சிக்கான ஏற்பாடுகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.

    • பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது
    • சொக்கப்பனை என்கின்ற சுடலை கொளுத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது.

    எளம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதன்படி 41வது ஆண்டு மகாதீப திருவிழாவை யொட்டி எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. தொடர்ந்து பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வ ரர் கோயிலில் 5 அடி உயர மகா தீப செம்பு கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டு வர ப்பட்டு பிரம்மரிஷ ிமலையாடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டது. பின்னர் செம்பு கொப்பைரைக்கு பூஜை விழா நடந்தது.

    இதை தொடர்ந்து பிரம்மரிஷி மலையின் மேல் 2 ஆயிரம் மீட்டர் திரி, ஆயிரத்து 8 லிட்டர் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை கடலூர் எஸ்பி ராஜாராம், சிவகாமி அதிபன் போஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

    அதேவேளையில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடி வாரத்தில் அமைந்துள்ள காகன ஈஸ்வரர் கோயிலில் மகா தீபத்தை ஏற்றுதலை தொடங்கி வைத்த எஸ் பி சியாமளாதேவி, பிரபாகரன் எம்எல்ஏ ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதன் பின்னர் சாதுக்களுக்கு வஸ்திர தானம், காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதா னமும் வழங்கப்பட்டது. விழாவில் திட்டக்குடி ராஜன், சன்மார்க்க சங்க தலைவர் சுந்தர்ராஜன், சிவசேனா கொள்கை பரப்புச் செயலாளர் சசிக்கு மார், டாக்டர் ராஜாசிதம்பரம் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி, தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் மற்றும் மகா சித்தர்கள் அறக்கட்டளை மெய்யன்பர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.

    பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை என்கின்ற சுடலை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன் முன்னிலையில் சொக்கப்பனை எனும் சுடலை கொளுத்தப்பட்டது

    இதேபோல் பெருமாள் கோவில், மரகதவள்ளி தாயார் சமேத மதன கோபால சுவாமி, சஞ்சீவி ராயன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    • கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்
    • அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது

    திருச்சி,

    தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று இந்து மக்கள் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் முன்பு மற்றும் மாடிப்பகுதியில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள். மேலும் வீட்டையே கோவிலாக மாற்றும் வகையில் வீடு, வாசல் முழுவதும் விளக்குகளை ஏற்றி கொண்டாடுவார்கள்.

    மேலும் வணிக நிறுவனங்கள், கோவில்களில் அதிக அளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெறும். தீபத்திருநாளையொட்டி திருச்சியில் அகல்விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 வரையிலும் அகல்விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அகல்விளக்கு ஏற்றுவதற்கு தேவையான தீப எண்ணெய், விளக்கு திரிகள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. இதனை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர்.

    • கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கை வழங்கும் விழா நடைபெற்றது
    • சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இருக்சுகை வழங்கும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு இருக்கைகள் வழங்கினார். அதன் பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களிடம் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    • வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் முற்றோதலுக்காக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பெரம்பலூர் மையத்தின் சார்பாக திருமாந்துறையைச் சார்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில், அப்துல் கலாம் மாணவர் வாசிப்பு இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செயல்படும் 100 மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக முதுகலைத் தமிழாசிரியர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் தமிழ் ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்ஆசிரியை புவனேஸ்வரி, பாண்டித்துரை, வேலாயுதம் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    அறந்தாங்கி, 

    தமிழகம் முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கடந்தவாரம் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சின்போது பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவன் மாரிமுத்துவின் உறவினர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் சக்திராமசாமி, பொன்கணேசன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மரம் நடும் விழாவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த போது எடுத்தப்படம்.

    • செட்டிகுளம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது
    • முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுத பாணி சுவாமி கோயில் உள்ளது. மற்ற முருகன் கோயில்களில் முருகன் கையில் வேல் இருக்கும். ஆனால் இந்த கோயிலில் முருகன் கையில் வேலுக்கு பதிலாக செங்கரும்பு ஏந்தி நிற்பார். இதனால் இந்த முருகனுக்கு செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா வையொட்டி ஷண்முகா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து தண்டாயுதபாணி உற்சவர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்ச வர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளோடு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்த னூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், பொம்மனப்பாடி, சத்திர மனை, வேலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை மற்றும் பெரம்பலூர் மாவட்ட மின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பக்தர்களுக்கு பிரசாத மும், அன்னதா னமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் இருந்து சுவாமிகள் செட்டி குளம் கடைவீதியில் அமைந்துள்ள ஏகாம்ப ரேஷ்வரர் கோயி லுக்கு வந்தடைந்தது. அங்கி ருந்து சிறப்பு அலங்காரம் செய்த பிறகு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது. முடிவில் சூரச ம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து செட்டி குளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேஷ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடை பெற்றது. 

    • அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர்,

    பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகனுக்கு வள்ளி தொய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • முன்னாள் நீதிபதி சேது முருகபதி கலந்து கொண்டு மாரியப்பனார்-சுந்தராம்பாள் உருவ படங்களை திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யா மாரியாப்பனார்-சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு ஐம்பெரும் விழா புதுவை ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அறக்கட்டை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரையாற்றினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், சபாநாயகம், சந்திர சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நீதிபதி சேது முருகபதி கலந்து கொண்டு மாரியப்பனார்-சுந்தராம்பாள் உருவ படங்களை திறந்து வைத்தார்.

    இவ்விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    மேலும் சாதனையாளர்களான பரந்தூர் புலவர் ராமசாமி, சேலம் கல்லூரி பேராசிரியர் அனிதா பரமசிவம், அருட்தந்தை அந்தோனி அடிகளார், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருஞானம், புதுவை வரலாற்று அறிஞர் முருகேசன், பழங்குடியினர் கூட்டமைப்பு ராம்குமார், பட்டிமன்ற நடுவர் கலக்கல் காங்கேயன், உருளையன் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, காராத்தே சுந்தரராஜன், புலவர் உசேன், திரைப்பட இசையமைப்பாளர் ஷாஜகான் உள்பட 15 பேருக்கு சாதனையாளர் விருதுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    விழாவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், புதுவை தமிழ்சங்கதலைவர் முத்து, செயலாளர் சீனு.மோகதாஸ், உசேன், பாடாகர் ஆதிராமன், திரைபட இயக்குனர் பேராசிரியர் முருகவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது

    பெரம்பலூர்,

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இணைப்பதிவாளரும் அலுவலக துணைபதிவாளருமான அப்துல் சலீம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் இந்திரா, சங்க செயலாட்சியர் தாரணி மற்றும் அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அருகே கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
    • உதவித் திட்ட அலுவலர் கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வளமைய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் ஆகியோர் தன்னார்வலர்களை வாழ்த்தி பேசினார்கள்.

    முடிவில் கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நன்றி கூறினார்.

    ×