என் மலர்
நீங்கள் தேடியது "யூடியூப்"
- யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை.
- அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான யூடியூப் (YouTube) பயனர்கள் வீடியோ தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த செயலிழப்பு யூடியூப் தளம், யூடியூப் செயலி, யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் மியூசிக் உள்பட அனைத்து தளங்களும் பாதிகப்பட்டது.
யூடியூப் தளம் செயலிழந்தது குறித்து டவுன்டிடெக்டர் (Downdetector) தளத்தில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவில், சுமார் 17,000 பேர் யூடியூப் முடக்கம் பற்றி பதிவு செய்திருந்தனர். யூடியூப் செயலிழந்ததை அந்நிறுவனம் விரைவாக ஒப்புக்கொண்டது. மேலும், இது தொடர்பாக X தளத்திலும் பதிவிட்டது.
அதில், "நீங்கள் இப்போது யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை - எங்கள் குழுக்கள் இதைப் பற்றி ஆராய்ந்து வருகின்றன...". "சிலர் யூடியூப் டிவி-யில் உள்நுழைய முடியவில்லை என்ற சிறிய எண்ணிக்கையிலான அறிக்கைகளையும் நாங்கள் காண்கிறோம். இது யூடியூப் முழுவதும் சிக்கலுடன் தொடர்புடையது. மேலும் நாங்கள் இங்கே அதை சரிசெய்யவும் பணியாற்றி வருகிறோம்," என்று கூறியது.
தற்போது யூடியூப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவில், "இறுதி அப்டேட்: எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் அனைத்து தளங்களும் (யூடியூப் தளம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் டிவி) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன! நாங்கள் இதை சரிசெய்தபோது எங்களுடன் நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்," என்று கூகுள் சப்போர்ட் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் தளத்தின் பரிந்துரைகள் அமைப்பில் உள்ள ஒரு சிக்கல் யூடியூபில் வீடியோக்கள் தோன்றுவதைத் தடுத்தது. இந்த செயலிழப்பு முகப்புப் பக்கம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆகியவற்றை பாதித்தது.
இதுகுறித்த சமூக வலைத்தள பதிவுகளின்படி, யூடியூப் பயனர்கள் வீடியோ பிளேபேக் தோல்வி, உள்நுழைவு மற்றும் கணக்கு அணுகல் சிக்கல்கள் மற்றும் யூடியூப் டிவியில் ஸ்ட்ரீமிங் தடங்கல்கள் போன்ற சிக்கல்களை தெரிவித்தனர்.
- சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.
- முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் செயலியான யூடியூப் உலகின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. இந்தியாவில் சுமார் 19,000-க்கும் அதிகமான பயனர்கள் யூடியூப் பயன்படுத்தமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
"Something went wrong" என்று மட்டுமே திரையில் தோன்றுவதால் பயனர்கள் அவதியுற்றனர்.
56% பயனர்கள் செயலி இயங்கவில்லை என்றும், 17% பயனர்களால் இணையதளத்தில் யூடியூப் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். யூடியூப் டிவியிலும் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது.
யூடியூப் Recommendation அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முகப்புப் பக்கம் மற்றும் தேடல் முடிவுகளில் வீடியோக்கள் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டது" என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பல இடங்களில் முகப்புப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும், முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடந்து வருவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலையரசி மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், உடல் எடையை குறைப்பது தொடர்பாக யூடியூப்பில் சில வீடியோக்கள் பார்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றுக்கு சென்று, யூடியூப்பில் பார்த்த குறிப்புகளை வைத்து சில மருந்து பொருட்களை வாங்கி உள்ளார். வீட்டுக்கு சென்று அந்த மருந்தை சாப்பிட்டு உள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் உடனடியாக கலையரசியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலையரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சோக சம்பவம் குறித்து அவருடைய தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து இதுபோன்று மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. டாக்டர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தை உட்கொண்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவி கலையரசி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையிலும் விசாரணை நடத்த உள்ளோம். முறையான விசாரணை இன்றி, நாட்டு மருந்து பொருட்களை கொடுக்கக்கூடாது என கடைக்காரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
- இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
- சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் வியூஸ்களை அள்ளின
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் உயிர்பெற்று, டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த காலகட்டத்தில், யூடியூப் போன்ற தளங்கள் சினிமா ரசிகர்களின் முதல் தேர்வாக மாறின.
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தன.
இந்தக் கட்டுரையில், 2025 ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் சினிமா டிரெய்லர்களைப் பார்க்கலாம்
1. கூலி (Coolie) – 54 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 28M + 10M +16M)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
இந்தபெரும் எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2. தக் லைஃப் (Thug Life) - 50 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 35M + 6.5M +8.8M)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணியில் இப்படம் உருவானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 2 ஆம் இடம் உள்ளது.
3. குட் பேட் அக்லி (Good Bad Ugly) – 39 மில்லியன் பார்வைகள் (டீசர்)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டீசர் தமிழில் மட்டும் 39 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 3 ஆம் இடம் உள்ளது.
4. ரெட்ரோ (Retro) 32 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 24M + 4.6M + 3.3M)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 4 ஆம் இடம் உள்ளது.
5. டிராகன் (dragon) - 26 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 21M + 5M )
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.
லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்பு வெளியான பிரதீப் ரங்கநாதன் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 5 ஆம் இடம் உள்ளது.
6. விடாமுயற்சி (Vidaamuyarchi) – 20 மில்லியன் பார்வைகள்
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நீண்ட நாட்களாக உருவாகி வந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழில் மட்டும் 20 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 6 ஆம் இடம் உள்ளது.
7. இட்லி கடை (Idli Kadai) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 16M + 4M)
தனுஷ் இயக்கி நடித்த படம் இட்டலி கடை. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராயன் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 7 ஆம் இடம் உள்ளது.
8. மதராசி (Madharasi) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 19M + 1M)
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மதராஸி படம் வெளியானதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 8 ஆம் இடம் உள்ளது.
9. பைசன் காலமாடன் (Bison Kaalamaadan) – 17 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 15M + 2M)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ஸ்போர்ட்ஸ்-டிராமா படம் பைசன் காளமாடன். கபடி வீரரின் வாழ்க்கையை வெளிப்படுத்திய இப்படத்தில் பசுபதி, அமீர், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 9 ஆம் இடம் உள்ளது.
10. காந்தா (Kaantha) – 14 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 6M + 7M + 1M)
துல்கர் சல்மான், ராணா டகுபதி நடித்த பீரியட்-டிராமா படம் காந்தா. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 10 ஆம் இடம் உள்ளது.
முடிவுரை:
2025 தமிழ் சினிமாவுக்கு யூடியூப் ஒரு பெரிய ஆயுதமாக மாறியது. இந்த டிரெய்லர்கள் வெறும் ப்ரோமோக்கள் அல்ல; அவை ரசிகர்களின் உற்சாகத்தை அளவிடும் அளவுகோல்கள். சூப்பர் ஸ்டார்களின் படங்கள் டாப்பில் இருந்தாலும், இளம் இயக்குநர்களின் படங்களும் தங்கள் இடத்தைப் பிடித்தன. இது தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
- இந்த ஆண்டு,உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இருந்து வெளியான பாடல்கள் உலக அளவில் வைரலானது.
- அனிருத், சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கக் காலமாக அமைந்தது. இந்தாண்டு தமிழ்த் திரையுலகம், இசை அளவில் புதிய உச்சங்களைத் தொட்டது. யூடியூப்பில் பாடல்களின் பார்வைகள் (வியூஸ்) எண்ணிக்கை, ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு, ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இருந்து வெளியான பாடல்கள் உலக அளவில் வைரலானது.
அனிருத், சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் பங்களிப்பு, தமிழ் இசையை உலக அரங்கில் கொண்டு சேர்த்தது.
இந்தக் கட்டுரையில், 2025-இல் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் பாடல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்தப் பட்டியல், லிரிக் வீடியோக்கள் மற்றும் முழு வீடியோக்களின் மொத்த பார்வைகளை அடிப்படையாகக் கொண்டது.
1. மோனிகா (Monica) - படம்: கூலி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள்: சுப்லாஷினி மற்றும் அனிருத்
பார்வைகள்: 314 மில்லியன் (லிரிக் + வீடியோ: 236M + 78M)
இந்தப் பாடல், ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் டைனமிக் பீட்ஸ், பூஜா ஹெக்டேவின் நடனம் இளைஞர்களை ஈர்த்தது. "மோனிகா... ஓ மோனிகா..." என்ற வரிகள், ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வைரலானவை. இந்தப் பாடல், 2025-இல் தமிழ் சினிமாவின் மாஸ் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.

2. கோல்டன் ஸ்பாரோ (Golden Sparrow) - படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடகர்கள்: சுப்லாஷினி
பார்வைகள்: 244 மில்லியன்
இது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் டூயட் பாடலாகும். பிரியங்கா மோகனின் சார்மிங் தோற்றத்துடன், ஜி.வி.பிரகாஷின் மெலடி, காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது. "கோல்டன் ஸ்பாரோ... என் நெஞ்சுல ஆரோ..." வரிகள், சமூக வலைதளங்களில் டிரெண்டானவை. இந்தப் பாடல், 2025-இல் இளம் தலைமுறையின் காதல் ஆன்தமாக மாறியது.

3. கனிமா (Kanimaa) - படம்: ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: 225 மில்லியன் (லிரிக் + வீடியோ: 123M + 102M)
இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். சூர்யா - பூஜா ஹெக்டே நடனம் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரல் மற்றும் நடனத்தால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. இந்தப் பாடல், தமிழ் சினிமாவின் உணர்ச்சி இசையின் சிறந்த உதாரணம் ஆகும்.

4. பொட்டல முட்டாயே (pottala muttaye) படம் - தலைவன் தலைவி
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: சுமார் 167 மில்லியன் (லிரிக் + வீடியோ: 67M + 100M)
தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி குரலில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடனத்தால் இந்த பாடல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.

5. முத்த மழை (Muththa Mazhai) - படம்: தக் லைஃப் (Thug Life)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சின்மயி
பார்வைகள்: 139 மில்லியன் (லிரிக் + வீடியோ: 129M + 10M)
ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கல் இசை மற்றும் சின்மயியின் இனிமையான குரலுடன் உருவான இந்த ரொமான்டிக் பாடல் நம்மை மெய்மறக்க வைத்தது. குறிப்பாக சின்மயியின் குரலால் இந்த பாடலுக்கு உயிரோட்டம் ஏற்பட்டதாக ரசிகர்கள் இந்த பாடலை வியந்தோதி ரசித்தனர்.

6. ஊரும் ப்ளட் (Oorum Blood) படம்: டியூட் (Dude)
இசையமைப்பாளர்: சாய் அபயங்கர்
பாடகர்கள்: சாய் அபயங்கர் மற்றும் அபர்ணா நாராயணன்
பார்வைகள்: 139 மில்லியன் (லிரிக் + வீடியோ: 130M + 9M)
இது டியூட் படத்தில் இடம்பெற்ற இது ஒரு ஹிப்-ஹாப் டிராக் ஆகும். இந்த பாடல் இளைஞர்களின் வாழ்க்கையை காதலை பிரதிபலித்தது. சாய் அபயங்கரின் கூல் பீட்ஸ் மற்றும் பிரதீப் மமிதாவின் டான்ஸ் இந்த பாடலை ஹிட் பாடலாக மாற்றியது. "ஒரு அலை அவ கலை அவ..." வரிகள், காதலர்களின் ரிங்டோனாக மாறியது

7. வழித்துணையே (Vazhithunaiye) படம்: டிராகன் (Dragon)
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மஞ்சே
பார்வைகள்: சுமார் 109 மில்லியன் (லிரிக் + வீடியோ: 31M + 78M)
டிராகன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் விருப்ப பாடலாக மாறியது. குறிப்பாக இந்த வீடியோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலால் தான் கயாடு லோகர் இனைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

8. ஜிங்குச்சா (Jinguchaa) படம்: தக் லைஃப் (Thug Life)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பார்வைகள்: சுமார் 96 மில்லியன்
இது தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். கமல்ஹாசன், சிம்பு நடனத்தாலும் வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் குரலாலும் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றது. "சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத ஆளு சமையலுக்கு ஏத்த ஆளு கிடைச்சிட்டான்..." வரிகள் பெண்களை வெகுவாக கவர்ந்தது.

9. கண்ணாடி பூவே (Kannadi Poove) – ரெட்ரோ (Retro)படம்: ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: சுமார் 88 மில்லியன் (லிரிக் + வீடியோ: 78M + 10M)
இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற காதல் சோக பாடலாகும். சந்தோஷ் நாராயணின் இசை மற்றும் குரல் இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தது. காதல் சோகத்தை நினைப்பவர்களின் ரிங் டோனாக இந்தாண்டு இந்த பாடல் மாறியது.

10. யெடி (Yedi) – படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
பாடகர்கள்: டல்கர், ஜோனிடா காந்தி
பார்வைகள்: சுமார் 84 மில்லியன் (லிரிக் + வீடியோ: 20M + 64M)
இது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற காதல் பாடலாகும். தனுஷ், ஜோனிடா காந்தி குரலால் இந்த பாடலால் பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக அனிகா சுரேந்திரன் நடனம் இந்த பாடலுக்கு மெருகூட்டியது.
முடிவுரை:
2025 தமிழ் இசை, பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சரியான கலவையாக இருந்தது. இந்தப் பாடல்கள், கோலிவுட்டின் உலகளாவிய தாக்கத்தை நிரூபித்தன. அடுத்த ஆண்டு, இன்னும் பெரிய வெற்றிகளை எதிர்பார்க்கலாம்!
- இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
- கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக ஆஸ்கார் விருதுகள் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வருடந்தோறும் அமெரிக்காவில் இந்த விழா பிரம்பாண்டமாக நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திரைபிரபலங்கள் அமெரிக்காவில் கூடுவர்.
அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி இந்த ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ABC தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. 2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது.
கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த காலத்தில் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, விருதளிக்கும் நிகழ்வு என ஆஸ்கார் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் மட்டுமே வெளியாகும்.
இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
இந்த மாற்றத்தினால் ஆஸ்கார் விருதுகளின் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகாடெமி தெரிவித்துள்ளது.
- இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கோர பண்டாவை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51). இவரது மனைவி அஞ்சலி (48). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளைய மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் தம்பதியினர் விழிப்பிதுங்கினர்.
அப்போது பிரமைய்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி தனது செல்போனில் உள்ள யூடியூபில் செயின் பறிப்பது எப்படி என்ற தொழில்நுட்பத்தை கணவன், மனைவி இருவரும் கற்றுக் கொண்டனர்.
பின்னர், ஐதராபாத் வந்த இருவரும் தனியாக செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட நகைகளை அஞ்சலி சித்தர் பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கினார். கடன் வாங்கிய பணத்தில் தங்களது கடன்களை அடைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு லிப்டில் வந்தார். லிப்ட் அருகே மறைந்திருந்த பிரமைய்யா மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்தார். இதில் மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மூதாட்டி சிக்கட் பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
நேற்று அசோக் நகரில் சுற்றி திரிந்த பிரமய்யாவையும் அவரது மனைவி அஞ்சலியையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
- டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
- டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார்.
இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.
- சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
- டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மாண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
- சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.
YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும்.
- பெண் அரசியல்வாதிக்கு நற்பெயரை கெடுக்கும் வகையில் வீடியோ பதிவு.
- கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள் என கண்டிப்பு.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் டி.பி. நந்தகுமார். இவர் அவருடைய யூடியூப் சேனலில், தன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், அவதிமதிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக, பிரபல பெண் அரசியல்வாதி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பத்திரிகையாளர் நந்தகுமார் முன்ஜாமின் கேட்டு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக் குவந்தது.
அப்போது நீதிபதிகள் "உங்களுடைய யூடியூப் வீடியோக்களை வைத்து மக்களை குற்றவாளிகளாக்க விரும்புகிறீர்காள?. தண்டனை அல்லது விடுதலை யூடியூப் வீடியோ அடிப்பயைில் நிகழ்வதில்லை. நீதிமன்றம் அதைச் செய்கிறது. யூடியூப்பில் நல்ல விசயங்களை சொல்லுங்க. இந்த குற்றத்தை ஏன் ஆன்லைனில் போடுகிறீர்கள்?. கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள்" என நீதிபதிகள் தெரிவித்துனர்.
அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






