search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social network"

    • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

    • பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர்.
    • மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி: 

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் ராமே ஸ்வரம், மண்டபம், புது க்கோட்டை, நாகப்பட்டினம், காரை க்கால் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பி டிக்க செல்கின்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர், பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவ ர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர். இந்நிலையில், மீனவர்க ளை விடுதலை செய்தா லும், கடந்த சில மாதங்க ளாக இலங்கை கடற்படை யால் பறிமுதல் செய்ய ப்பட்ட விசைப் படகு களை அந்நாட்டு கோர்ட்டு உத்தர வுப்படி யாழ்ப்பாணம், முல்லைதீவு, மயிலடி உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படகுகளில் பெரு ம்பாலானவை தற்பொழுது சேதம் அடைந்து நீரில் மூழ்கி காணப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. குறிப்பாக மாண்டஸ் புயல் காரணமாக, விசைப்படகு கள் சேதமானதாக வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைர லாகி வருவதால், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிலர், மீனவர்களின் வாழ்வா தாரமே பல லட்சம் செலவு செய்த படகுகளில் தான் உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இல ங்கையில் சிறைப் படுத்தப் பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் படகுகளை விரைந்து மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்

    திருப்பூர் :

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)

    எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

    • சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் 60 மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சக மாணவி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு.
    • சக மாணவிகள் குளியலறையில் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். ரகசிய வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வீடியோக்களை மாணவர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்தது சக மாணவி ஒருவர் என்பது பின்னர் தெரியவந்தது. விடுதியில் தங்கி படிக்கும் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், சக மாணவிகள் குளியலறையில் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார்.

    சுமார் 60 மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோக்களை அவர் பல மாதங்களாக எடுத்துள்ளார். மேலும் மாணவிகளின் குளியல் வீடியோக்களை பணத்துக்காக விற்று இருக்கிறார்.

    மாணவியிடம் இருந்து வீடியோக்களை வாங்கிய அவரது ஆண் நண்பர் மற்றொரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    அதன்பின் வீடியோக்கள் சமூக வலைதளங் களிலும் கசிந்தது. இதற்கிடையே வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அதை போலீசார் மற்றும் பல்கலைக்கழகம் தரப்பில் மறுத்தனர்.

    இதுதொடர்பாக மொகாலி போலீஸ் அதிகாரி விவேக் சோனி கூறும்போது, மாணவிகள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரு மாணவி பதற்றத்தில் மயங்கி விழுந்தார்.

    அவர் ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஒரு வீடியோவை தவிர வேறு எந்த வீடியோவும் எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    பஞ்சாப் முதல்வர், பகவந்த் மான் டுவிட்டரில் கூறும்போது, "சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வருத்தமளிக்கிறது. எங்கள் மகள்கள் எங்கள் மரியாதை. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    மாநில கல்வி மந்திரி ஹர்ஜோத்சிங் பெய்ன்ஸ் கூறும்போது, "சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். நமது சகோதரிகள் மகள்களின் கண்ணியம் தொடர்பானது. எனவே அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை ஒரு பெண் பதிவு செய்து இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.

    இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்ட உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.

    • காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார்

     கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பேரில் குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார். ஆனால் ரவிசங்கர் தன்னுடன் 25 வயது பெண் சேர்ந்து எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்தார். அதன் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிசங்கர் என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும்.
    கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம்.

    தற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக எடுத்து வைக்கும் அவசரங்கள் அரங்கேறத்தொடங்கி விட்டன.

    கடந்த காலங்களில் ஒருவர் கதை, கட்டுரை, கருத்துரை, விமர்சனம் ஆகியவற்றை எழுதுகிறார் என்றால், அதற்காக அவர் எழுதி எழுதி கிழித்துப்போடும் காகிதங்கள் அதிகமாக இருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதேநேரம் இன்று கருத்துகளின் கூர்மையும், அது அனைவரையும் சென்றடையும் நேரமும் குறைந்து விட்டது.

    இரவுக்கு பகல் எப்படியோ, அதேபோல கருத்துக்கு எதிர்கருத்து எப்போதுமே உண்டு. கருத்துமோதல்கள் என்பது காலம் காலமாக உலக அளவில் இருந்து வரும் ஒரு கலை. அந்த கருத்து சுதந்திரம் என்பது எல்லை மீறும்போது பல மனங்களை காயப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தையே சில நேரங்களில் சீர்குலைத்துவிடுகிறது.

    பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும். குறிப்பாக ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்கு ஆக்கப்பூர்வமான பதில் சொல்ல முடியாத நிலையில், சிலர் ஆபாச வார்த்தைகளால் ‘கமெண்ட்’ செய்வதை பார்க்க முடிகிறது.

    அது மட்டுமின்றி தங்களது தரப்பு பிரச்சினைகளை நியாயப்படுத்த கத்தரித்து கற்பனையுடன் தொகுக்கப்பட்ட படக்காட்சிகளை வெளியிடுகின்றனர். இதை பார்த்து உண்மை என்று நம்பி பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடும் சூழலும், கொதித்தெழும் நிலைமையும் நீடிக்கிறது.

    அதை விடவும் மோசமாக தொலைக்காட்சிகளில் போடப்படும் அவசர செய்தி (பிரேக்கிங் நியூஸ்) பாக்ஸ்களை அப்படியே எடுத்து பொய் தகவல்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இது அவசர உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது பொய்யான தகவல் என்பதே பலருக்கும் தெரியாமல் முடிந்து போய்விடுகிறது என்பதுதான் காலக்கொடுமையாக உள்ளது.



    அதுமட்டுமா, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பெண் மற்றும் ஆண் அரசியல்வாதிகளின் அழகையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மீம்ஸ் என்ற பெயரில் பதிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் மற்றும் கருத்து சித்திரம் வரைந்து வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சித்திரங்களை பார்த்து சம்பந்தப்பட்டவர்களே சிரித்து இருக்கிறார்கள். காரணம் அதில் உள்நோக்கம் இருக்காது.

    ஆனால் இன்று அந்த நிலை மாறிவருகிறது. சமூக ஊடகங்களில் வலம் வரும் கேலிச்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களை கோபமடையச்செய்கிறது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு மன வலியையும் ஏற்படுத்துகிறது. இதனால் காவல் துறையில் புகார் கொடுக்கும் நிலைமைக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் யாரோ ஒருவர் அனுப்பும் மோசமான கருத்து, பலரால் பகிரப்பட்டு விடுகிறது. இதில் யாரை பிடித்து காவல்துறை விசாரிக்கும்? இது இன்றைய காலத்தின் ஒரு கவலைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.

    அதுமட்டுமின்றி தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, அவர்கள் இறந்து விட்டதுபோல கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை பதிவிடுவது போன்ற பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இது எப்படி கருத்து சுதந்திரமாகும்? சமூக வலைத்தளங்களில் உண்மை முகங்களை விடவும் பொய் முகங்களே அதிகமாக வெளிக்காட்டப்படுகிறது. இது இந்த சமுதாயத்தை அச்சுறுத்தும் மிகவும் ஆபத்தான அறிகுறி.

    அதுமட்டுமின்றி ஒரு கருப்பு நிறமுடைய குண்டான ஆணும், சிகப்பு நிறம் கொண்ட ஒல்லியான பெண்ணும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெல்லை அல்வா ஆப்பிரிக்காக் காரனுக்கு கிடைத்து உள்ளது என்று பதிவிடுகிறார்கள். அழகை யார் நிர்ணயிப்பது. ஒருவருக்கு அழகாக தெரியும் ஒன்று மற்றவருக்கு அவலட்சணமாக தெரியலாம். ஒருவருக்கு லட்டு பிடிக்கும், இன்னொருவருக்கு ஜாங்கிரி பிடிக்கும். இரண்டுமே இனிப்புதான். ஆனால் பொருள் வேறு அல்லவா?

    மணப்பெண்கூட அந்த மாப்பிள்ளையை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் அதை பார்க்கும் மற்றவர் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த வன்மத்தை புகைப்படத்துடன் பதிவாக கொடுக்கிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். அதை பதிவிடும் முன்பு நமது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்தால், இப்படிப்பட்ட பதிவுகள் வெளியிடும் மனது யாருக்கும் வராது.

    சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்குக்கும், பொது அறிவு தேடலுக்குமான களமாக இருக்க வேண்டும். போர் என்றால் கூட விதிமுறை உண்டு. ஒரு விளையாட்டு என்றாலும் ஒரு விதிமுறை உண்டு. விதிமுறை இல்லாத கருத்து சுதந்திரம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது.

    எனவே, கருத்தை பதிவிடும் ஒவ்வொருவரும் அந்த கருத்தால் மற்றவருக்கு என்ன பயன்? என்று சிந்தித்து பதிவிடுவது முக்கியம். மற்றவர்கள் இதயத்தை குத்திக்கிழிக்கும் எந்த ஒரு கருத்தும் மனங்களை கொள்ளை கொள்ளாது என்பதை கருத்தில் கொண்டால், விரும்பத்தகாத, அருவருக்கத்தக்க கருத்துகளும், படக்காட்சிகளும், வீடியோ காட்சிகளும் வலைத்தளங்களில் வட்டமடிக்காது.

    அது இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும். சமூக பொறுப்பு என்பது முதலில் தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது.

    -முத்துக்குட்டி 
    ×