என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை கடற்படை"
- ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
- வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
- ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
- மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- 2 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
ராமேசுவரம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு புறப்பட்டனர். இதில் கீழகாசாகுடி மேடு பகுதியை சேர்ந்த பிரதாப், கிளிஞ்சல் மேடு ஜெகன் ஆகியோருக்கு சொந்தமான படகில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலை பாக்ஜலசந்தி அருகே இந்திய எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு பகுதியில் காரைக்கால் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை.
எனவே இங்கிருந்து உடனடியாக செல்லுங்கள் என எச்சரித்தனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். அப்போது பிரதாப், ஜெகன் ஆகியோரது படகுகளில் வந்து மீன்பிடித்த 25 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்படித்தனர்.
பின்னர் 25 பேரும் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் கைதான மீனவர்கள் 25 பேரும் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்ததாக கூறி காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
- சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக-புதுச்சேரி மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மீனவர்களின் ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை காங்கேசன் முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை காங்கேசன் முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கைது செய்த 11 மீனவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
- விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.
தமிழக-புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மின்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வடமேற்கு கடற்பரப்பில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை பறிமுதல் செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்த 11 மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.
விசாரணை முடிந்து மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக-புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்வு காணவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
- மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
- 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மண்டபம் மீனவர்கள் 3 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள், நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்ககோரி அனைத்து மீனவ சங்கங்கள் சார்பாக மண்டபம் கோவில் வாடியில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று மண்டபம் கோவில்வாடி கடலோர பகுதியில் உள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் காரணமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த மூன்று மீனவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மீனவர்கள் மூன்று பேரையும், படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
- ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23.12.2025 அன்று சிறைப்பிடித்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இது போன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு, மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (2024 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட) இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
- மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






