என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக மீனவர்கள்"
- மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
சீர்காழி:
தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று நாகை மீனவர்கள் 31 பேர், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதோடு சேர்த்து, மொத்தம் 114 மீனவர்கள் காவலில் உள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது.
எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கைதான மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.
- இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை
தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துதுள்ளனர்.
- ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
- தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரான் கிஷ் தீவில் வசித்து வரும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுவரை எந்த தூதரக அதிகாரிகளும் நேரில் வந்து தமிழக மீனவர்களை சந்திக்கவில்லை என அங்கிருக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

உடனடியாக தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இந்தநிலையில், ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று புதுடெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளரை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
- கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
- நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது.
புதுடெல்லி:
அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டையொட்டி பா.ஜ.க. பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் கட்சியின் இளைஞரணி சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தமிழக மீனவர் பிரச்சனைக்கு, அவசர காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளே காரணம் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.
அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.
உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் போலீசார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.
அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.
நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருககிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
- 23 மீனவர்களை இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
- இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மே 25ம் தேதி நாகையைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 101 மீனவர்கள், 12 படகுகளையும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
- காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.
- நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும்.
இன்னல் பல எதிர்கொண்டு கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் வாழ்வாதாரமும் ஊசலாட வாழ்கின்றனர் மீனவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.
எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
- 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்:-
* இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழி செய்யும் பொருட்டு தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
* மீனவர்களுக்கு மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டம்.
* மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* 15,300 மீனவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க ரூ.20.57 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* வலை பின்னுதல், படகு பழுது பார்த்தல், வண்ணமீன் தொட்டி தயாரிப்பு போன்ற பயிற்சிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும்.
* 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.
* காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.
* இந்த திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார்.
- 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
- இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?
சென்னை:
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.
அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.
இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.






