search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaishankar"

    • கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
    • முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

    கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஹைதியில் இருந்து வெளியேறும்படி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    புதுடெல்லி:

    கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த தவறியதால் அங்கு சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதனால் காவல் நிலையங்கள், போலீஸ் அகாடமி, சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமையால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டினரை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நமக்கு தேவையான உதவிகளை செய்யும் டொமினிக்காவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர்
    • சமீபகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும். கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (11-3-2004) கடிதம் எழுதியுள்ளார்

    அக்கடிதத்தில், "இலங்கைக் கடற்படையினர் 10.03 2024 அன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு, 22 மீனவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டு இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் என்பதால் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

    நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர் என்றும் மீன்பிடித் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சமீபகாலமாக அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும். கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார் இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதிக்கப்படும் மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

    எனவே உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு. மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாகவும். தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை.
    • பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

    இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த காசா பயங்காரவாதிகள் பொதுமக்களை சரமாரியாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குல் தொடர்ந்தது. வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் அதன்பின் காசா முழுவதும் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியது.

    இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் அடங்குவர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் உணவு, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகிறார்கள்.

    மனிதாபிமான நெருக்கடிகள் உருவாகிய நிலையில் பெரும்பாலான நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தின. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து, இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்யும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பிணைக்கைதிகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஒரு பக்கம் அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. மறுபக்கம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. இந்த நிலையில்தான் ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல்- ஹமாஸ் போரில் முதலில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது. பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என குரல் கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக ஜெய்சங்கர், "மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும்.

    அதேவேளையில் பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை" என்றார்.

    ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 55-வது செசன் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் மீது கடந்த வரும் அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை சேர்ந்த 10 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.

    • முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்திய ராணுவம் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்தார்.
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அணிசேரா அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா சென்றார். அங்கு மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் "இரு நாடு உறவுகள் பற்றி வெளிப்படையாக உரையாடினோம்., மேலும் அணிசேரா அமைப்புத் தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மலாத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பக்கத்தில், "அணிசேரா அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது, மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது, சார்க் மற்றும் அணிசேரா அமைப்பின் ஒத்துழைப்பு குறித்து உரையாடினோம். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி விரிவாக்குவது குறித்தும் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஜனவரி 8-ஆம் தேதி சீனா சென்ற முகமது முய்சு, மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தினைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற அறிவுறுத்தும் அறிவிப்பு வந்தது.

    முன்னதாக, இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

    மாலத்தீவு உனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஈரான் சென்றுள்ளார்.
    • ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டெஹ்ரான்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் அதிபர் சையத் எப்ராகிம் ரைசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
    • எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என புதின் தெரிவித்தார்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ரஷியா சென்றுள்ளார். ரஷியா சென்ற அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர் ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறுித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்தார்.

    "எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என ஜெய்சங்கரிடம் புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த பிறகு ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

    இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ரஷியாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருமனதாக பிரகடனம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்திருந்தார்.

    • அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
    • அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறையிடம் இந்திய தூதரகம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமெரிக்க கோவில் சுவரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எழுதிய எதிர்ப்பு வாசகங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் இதுபோன்ற சக்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. அங்குள்ள இந்திய தூதரகம் அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் தீபாவளி விழா நடந்தது.
    • இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

    லண்டன்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகை இங்கிலாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தேநீர் விருந்து அளித்தார்.

    இந்நிலையில், தீபாவளி விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ உடன் கலந்துகொண்டார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
    • அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    • கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உள்பட பல்வேறு சேவைகளை தனியார் நிறுவனம் அளித்து வருகிறது.
    • 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

    புதுடெல்லி:

    கத்தார் நாட்டில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படையில் ஓய்வுபெற்ற கேப்டன்கள் நவ்தேஜ்சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஷ்ட், கமாண்டர்கள், அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுனாகர் பகலா, சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உள்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.

    இந்த நிலையில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான 8 பேரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.

    இது தொடர்பாக சமூக வலைதளமான தனது எக்ஸ் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கத்தாரில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்தேன். இந்த வழக்குக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களது கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம்.

    அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.

    இவ்வாறு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    ×