என் மலர்
உலகம்

பாகிஸ்தான் சபாநாயகருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
- கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
- 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா சென்றார்.
அங்கு பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்துப் பேசினார். கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது வெறும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளது.
இத்தகைய பலதரப்பு நிகழ்வுகளில் சந்திப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்று என்றும், இது முறையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.






