என் மலர்
நீங்கள் தேடியது "Bangladesh"
- இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
- கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.
கிரிக்கெட் களத்தில் ஆடும் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை என்லாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் இருக்கும் காமெடியை வெளிப்படுத்த விராட் கோலி தவறியதே இல்லை.
அந்த வகையில், இன்று இந்தியா மற்றம் வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் போது, "வாட்டர் பாய்"-ஆக களத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு நீராகாரம் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி வேகவேகமாக ஓடி வந்தார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை விராட் கோலி ஓடிய விதம் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களை குவித்தார்.
- இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்களை இழந்து 265 ரன்களை குவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களையும், தௌஹித் ரிடோய் 54 ரன்களையும் நசும் அகமது 44 ரன்களையும் குவித்தனர்.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இவர்தவிர முகமது ஷமி இரண்டு விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார்.
லாகூர்:
6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணி மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக நைம் - ஹசன் மிர்ஷா களமிறங்கினர். அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார். அடுத்த ஓவரை நசீம் ஷா வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் ஹசன் மிர்ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து நைம் மற்றும் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லிட்டன் தாஸ் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நைம் 7-வது ஓவரில் ஹரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
10-வது ஓவரின் முதல் பந்தில் தௌஹித் ஹிரிடோய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், அப்ரிடி, நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
- வங்காளதேச அணியின் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார்.
- இலங்கை அணியில் சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார்.
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமா 54 ரன்களை குவித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
- ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார்.
- அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.
டாக்கா:
வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 30-ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் வங்காளதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது.
அதன்படி வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார். அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.
இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில்:-
வரவிருக்கும் பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மிகவும் சிக்கலான நேரத்தில் அணிக்கு ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்துள்ளோம். உலகக்கோப்பைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஷகிப்பை தவிர வேறு சிறந்த கேப்டனையும் தேர்வு செய்ய இயலாது. உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை நாளை அறிவிக்க உள்ளோம்' என கூறினார்.
இதன் மூலம் ஷகிப் வங்காளதேசத்தின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகி உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஷகிப் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வங்காளதேச அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
- இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.
மிர்பூர்
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
- நியூசிலாந்து, வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
- நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.
மும்பை:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.
நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
அதேபோல் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜடேஜா இந்த தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் , இஷான் கிஷன் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
- வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது குறித்து விவாதம்.
- நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.
இந்தியா-பங்களாதேஷ் நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரிக கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். பங்களாதேஷ் பிரதிநிதிகள் குழுவிற்கு அந்நாட்டின் நீர் வளத்துறை மந்திரிக ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். பங்களாதேஷ் நீர் வளங்கள் துணை மந்திரி இனாமுல் ஹோக் ஷமீமும் கூட்டத்தில் கலந்து கொண்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நதிகளின் நீரை பகிர்வது, வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது, நீர் மாசு பிரச்சனையை எதிர்கொள்வது போன்ற பரஸ்பர விருப்பம் உள்ள ஏராளமான இருதரப்பு விவகாரங்கள் இந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய-வங்கதேசம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதி செய்யப்பட்டதை இருதரப்பும் வரவேற்றன. நிகழ்கால வெள்ள தரவுகளை இந்தியா வங்கதேசத்துடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தைமூர் கப்பலை ஆகஸ்ட் 15-ந் தேதி கராச்சிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்.
- தைமூரை சட்டோகிராம் துறைமுகத்தில் நிறுத்த பங்களாதேஷ் அனுமதி மறுப்பு.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலஙகை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.
இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இந்து சமூகத்தினர் மீதான தாக்குதலைக் கண்டித்து பேரணி நடைபெற்றது.
- நரைல் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது.
டாக்கா:
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முகநூல் பதிவு தொடர்பாக நரைல் மாவட்டத்தில் உள்ள ஷஹாபரா பகுதியில் இந்துக்களின் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற தொடர் தாக்குதல்களை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.