என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்வழி தடம் மூடல்"

    • இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து வான்வெளியை மூடுவதாக துருக்கி தெரிவித்தது.
    • இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு கடந்த வாரம் தடை விதித்தது.

    அங்காரா:

    இஸ்ரேல்-காசா இடையிலான போர் தொடங்கியது முதலே துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது.

    காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.

    இந்நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடன் கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என தெரிவித்தார்.

    மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் பேசிய அவர், காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறி என தெரிவித்தார்.

    ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
    • இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் செப்டம்பர் 23 வரை நீட்டித்தது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

    • கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
    • அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், கத்தார் தனது சர்வதேச வான்வெளியை மூடியுள்ளது.

    கத்தார் வெளியுறவு அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) மாலை அதன் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.

    இது ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும், கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.

    இதற்கிடையில் தற்போது கத்தாருக்குச் செல்லும் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    அமெரிக்காவின் முக்கிய விமான படைத்தளமான அல் உதெய்த் கத்தாரில் உள்ளது. மேலும் கத்தாரில் முக்கிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸுவும் இங்கு செயல்படுகிறது.

    எனவே தங்கள் அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் கத்தார் தனது வான்வெளியை மூடியதாக தெரிகிறது. 

    சர்வதேச விமான போக்குவரத்துக்கு பாகிஸ்தானில் மேலும் 2 நாட்கள் வான்வழி தடம் மூடப்படுகிறது. #Aerialtrack

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வா மாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.

    இதனால் 2 நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஒருவருக்கு ஒருவர் கூறி வருகின்றனர். அதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தனது வான்வழி தடத்தை பாகிஸ்தான் மூடியது.

    கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி முதல் நேற்று வரை வான்வழி தடம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    எனவே இன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான்வழி தடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும், நாளையும் (11-ந்தேதி) மேலும் 2 நாட்களுக்கு மூடப்படும். இருந்த போதிலும் வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்கள் குறிப்பிட்ட விமானங்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மாலை 3 மணிக்கு வான்வழி தடம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் வான் வழி தடம் மூடப்பட்டுள்ளதால் ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் பாகிஸ்தான் விமான நிலையங்களில் சிக்கித்தவித்தனர். #Aerialtrack

    ×