என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான்"

    • இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும்

    இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.

    வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. 

    • போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர்.
    • காசாவில் சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    இந்நிலையில், "ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்" என அறிவித்து Oxford Union Society தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான விவாத சங்கமான Oxford Union Society-யில், பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

    • தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.
    • அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.

    இந்த நிறுவனம், ஆகிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மார்கோ கிளிங்கே நிறுவனத்துடன் இணைந்து, ஏவுகணை மோட்டார்களில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்க்ளோரேட் போன்ற ரசாயனப் பொருட்களை ஈரான் பெற உதவியதாக அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த ஜூலை மாதம், ஈரான் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
    • ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன.

    அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற "ஸ்னாப்பேக்" (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்கள் கழித்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

    தற்போது அமலுக்கு வந்துள்ள இந்திய தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும், மேலும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.

    முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது.

    ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 28) முதல் தடைகள் அமலுக்கு வந்தன.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரானுக்கு இந்த தடைகள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீது தடை விதிக்க ஐநாவுக்கு உரிமை இல்லை என்றும் இந்த தடைகளால் தங்களுக்கு எந்த பொருளாதார பாதிப்புகளும் இருக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. 

    • அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
    • அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.

    ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.

    இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.

    பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.

    சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.  

    • ஆஸ்திரேலியாவில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதனால் ஈரான் உடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    இதுகுறித்து ஈரான் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் ஈரானிய புரட்சிகர காவல்படை அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது உறுதியானது. இந்த அமைப்பை ஆஸ்திரேலியா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இஸ்ரேல்-காசா போருக்கு பிறகு இந்த தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

    இதனால் ஈரானுடனான உறவை துண்டிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. எனவே நாட்டில் உள்ள ஈரான் தூதர் உடனடியாக வெளியேறுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

    அதேபோல், ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு நாட்டின் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

    இதனையடுத்து இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே ஈரானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான் பயணத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

    • அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது.
    • அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை

    அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது. அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை" என்று தெரிவித்தார்.

    கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.

    இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13 அன்று ரானின் ராணுவத் தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் 12-ம் நாளில் ஜூன் 24 அன்று போர்நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

    சுமார் 260-க்கும் மேற்பட்டோர் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த ஜூன் மாதம் மட்டும், இஸ்ரேல், ஈரான், உளவாளிஇஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.
    • ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் 12 நாட்கள் போர் நீடித்தது.

    இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஈரான் உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவியுள்ளது.

    இந்த உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரான் நாட்டின் உயர்ந்த பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும். ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் தலைமையில் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கவுன்சில் பாதுகாப்பு திட்டம், ஈரான் அயுதப்படைகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை கையாளும். பாராளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி, ராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் இதன் தொடர்பான அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள்.

    கடந்து ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவத் தளபதி மற்றும் கமாண்டர்ஸ் ஆகியோரும் அடங்குவர்.

    1980ஆம் ஆண்டு ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையில் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இது போன்று பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது.

    • பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

    தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்றக் கட்டடத்தின் மீது மரம் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

    தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளது. இங்கு தீவிரவாதக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. 

    • ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
    • ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.

    அமெரிக்கா- ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதலின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது.

    ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி கூறியதாவது:-

    ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.

    இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அமெரிக்க போர் கப்பலை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.

    ஈரான் கடல்பகுதியில் இருந்து விலகி செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஈரான் விமான பாதுகாப்பு படையினர், அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என தெரிவித்தது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.

    இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை படை கூறும்போது, பாதுகாப்பான மற்றும் தொழில்துறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அதனால், அமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தது.

    • ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
    • பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    ஈரானின் ஷிராஸ் நகரில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழநதனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.

    ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த விபத்து இன்று (ஜூலை 19) காலை 11:05 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 55 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×