என் மலர்
நீங்கள் தேடியது "Iran nuclear deal"
- ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.
போராட்டம்-வன்முறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
மேலும், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டது. அதன்படி ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினர். இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு, மத்திய கிழக்கு பகுதிக்கு புறப்பட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அந்த போர்க்கப்பல் ஈரானை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளது.
ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.
ஈரானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில் பாரசீக வளைகுடாவில் உள்ள யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் ஜெரால்ட் ஆர் போர்டு போர்க்கப்பல் இணைய உள்ளது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம் என இதில் கையொப்பமிட்டுள்ள இதர வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Irannucleardeal #Viennanuclearmeet

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.
இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இன்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கெல் ஆலோசனை மேற்கொண்டார். #IranNuclearDeal #Putin #Merkel
ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முன்தினம் விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது.
இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே சார்ந்து உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக ஈரான் திகழ்ந்து வருகிறது.

இப்போது ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதால், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்காது. ஏனென்றால், அமெரிக்காவை போன்று ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்காதது வரையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்காது.
ஈரானிடம் இருந்து வாங்குகிற கச்சா எண்ணெய்க்கான விலையை ஐரோப்பிய வங்கிகள் வழியாகத்தான் இந்தியா கொடுத்து வருகிறது. அவற்றை தடை செய்யாத வரையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடரும்.
தற்போது ஈரானில் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
ஈரான் அதிபர் ரூஹானி சமீபத்தில் இந்தியா வந்து சென்றபோது, 2018-19 ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 96 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடையால் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, ஈரான் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும்.
ஏற்கனவே அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடும் என்ற எதிர்பார்ப்பில், கச்சா எண்ணெய் ஒப்பந்த விலை உயரத் தொடங்கி விட்டது. கடந்த 3½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு அமைந்து உள்ளது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு (சுமார் ரூ.5,200) உயரும் என்ற பேச்சு உள்ளது.
நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.
அமெரிக்கா விலகலுக்கு முன்பாகவே எரிபொருள் விலை 20 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் நிலை உருவாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோது, அது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43 ஆகவும், டீசல் விலை ரூ.69.56 ஆகவும் உள்ளது. இந்த விலை மேலும் உயர்கிறபோது, அது சங்கிலித்தொடர்போல ஒவ்வொன்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பண வீக்கம் எகிறும் எல்லா பொருட்களின் விலைகளும் உயரும். நாட்டின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். #IranNuclearDeal #PetrolDieselPrice #Tamilnews






