search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார்- அமெரிக்கா
    X

    கடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார்- அமெரிக்கா

    ஈரானுடன் 2015-ம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிய அமெரிக்கா, தற்போது மீண்டும் அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. #IranNuclearDeal #US
    வாஷிங்டன்:

    2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவருவதாக கூறி வந்த அமெரிக்கா, சமீபத்தில் இதில் இருந்து விலகியது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். “எங்களது தீவிரம் குறித்து ஈரான் தலைவர்களுக்கு சந்தேகமே வரக்கூடாது” என அவர் உறுதிபட கூறினார்.

    ஈரான் மீதான புதிய அமெரிக்க கொள்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 12 கடுமையான நிபந்தனைகளுடன் ஈரான் உடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவது போன்ற அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×