என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா போர் கப்பல்"

    • ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
    • ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.

    அமெரிக்கா- ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதலின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது.

    ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி கூறியதாவது:-

    ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.

    இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அமெரிக்க போர் கப்பலை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.

    ஈரான் கடல்பகுதியில் இருந்து விலகி செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஈரான் விமான பாதுகாப்பு படையினர், அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என தெரிவித்தது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.

    இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை படை கூறும்போது, பாதுகாப்பான மற்றும் தொழில்துறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அதனால், அமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தது.

    • செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றிணைந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளையில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற இங்கிலாந்தை சேர்ந்த எண்ணை கப்பல் மீதும் ஏவுகணைகளை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா கப்பல், செங்கடலை கடந்து ஏமன் வளைகுடாவில் சென்றபோது ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலில் தீப்பிடித்தது. அதை கப்பல் ஊழியர்கள் போராடி அணைத்தனர்.

    இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர்.

    மத்திய கிழக்கு பகுதி கடலில் தொடர்ந்து வணிக கப்பல்களை தொந்தரவு செய்து வரும் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடந்த சில தசாப்தங்களில் மிகப்பெரிய மோதலாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் இன்று அதிகாலை செங்கடலை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக வைத்திருந்த ஹவுதி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹவுதியின் அல்-மசிராஹ் செயற்கைக்கோள் செய்தி சேனல், துறைமுக நகரான ஹொடெய்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதன்முறையாக அமெரிக்காவின் போர்க்கப்பலை குறிவைத்துள்ளது.

    ×