என் மலர்tooltip icon

    ஏமன்

    • இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    • முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது

    ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் அங்கு 12 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. 

    ஹவுதிக்களின் ராணுவ கட்டமைப்புடை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள மக்களும் கப்பல்களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது எச்சரிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த செப்டம்பர் 10 அன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
    • தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்.

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.

    தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியது.
    • ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • 12 பேர் மட்டுமே பாதுகாப்பாக கரையை அடைந்தனர்.
    • கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர்.

    ஏமனில் செங்கடலில் படகு கவிழ்ந்ததில் 76 அகதிகள் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை, ஏமனின் அப்யான் மாகாணம் அருகே 157 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

    இதன் விளைவாக, 157 பேர் தண்ணீரில் விழுந்தனர்.  இவர்கள் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்த்தவர்கள் ஆவர்.

    கான்பார் மாவட்டத்தில் கடற்கரையில் 54 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் சில உடல்கள் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.  இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

    உலகம் முழுவதும், அதிக சுமை காரணமாக அகதிகள் பயணிக்கும் படகுகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர்.  

    • நிமிஷா பிரியாவிற்கு 2018ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
    • 2023ஆம் ஆண்டு ஏமன் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

    அவரது மரண தண்ட னையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

    இந்தநிலையில் நர்சு நிமிஷா பிரியாவுக்கு கடந்த 16-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. நர்சு நிமிஷா பிரியாவை தூக்கு தண்டனையில்இருந்து காப்பாற்றும் நடவடிக்கை களில் அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.

    இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நர்சுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டனர்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டு குடிமகன் தலால் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நர்சு குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. நர்சு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்ற முடிவை, கொலை செய்யப் பட்ட தலாலின் குடும்பத்தினர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நர்சின் மரண தண்டனையை ரத்து செய்ய கொள்கை அளவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள தாக "சேவ் நிமிஷா பிரியா" கவுன்சிலின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வக்கீலுமான சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் எனவும், கருணை உள்ளிடட விவாதங்கள் தொடரும் என்றும் அவர் கூறி யிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    நர்சுக்கான மரண தண்டனைக்கான கோரிக்கையை வாபஸ் பெற தலாலின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தலாலின் பெற்றோர் உயிருடன் உள்ளனர். மேலும் அவரது குழந்தைகளும் இருக்கின்றனர். ஏமன் சட்டப்படி இறந்தவரின் சொத்தின் வாரிசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.அதன்படி இறந்தவரின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தான் முடிவெடுக்க வேண்டும்.

    அவர்கள் இல்லையென்றால் தான் உடன் பிறந்த சகோதரர் முடிவெடுக்க முடியும். நாங்கள் எங்களின் சொந்தவழியில் விவாதங்களை நடத்து கிறோம். மத்திய அரசு இந்த விவாதங்களில் எதிலும் பங்கேற்கவில்லை. இரண்டு வாரங்களாக நாங்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
    • 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கொலைக் குற்றத்திற்காக நாளை (ஜூலை 16) ஏமனில் மலையாள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் நிமிஷாவை காப்பாற்ற மதத் தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கேரள இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் ஏமன் மத குருக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் குறித்து அபூபக்கர், ஏமன் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமருடன் கலந்துரையாடினார்.

    மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று காந்தபுரம் அபூபக்கர் வலியறுத்தி உள்ளதாக தெரிகிறது. மரண தண்டனைக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    • குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டது.

    ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.

    இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.

    ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஏமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதினர், மற்ற இருவர் 14 வயதினர் என்றும், ஐந்தாவது குழந்தையின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிற போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் முக்கிய களமாக தைஸ் நகரம் இருந்து வருகிறது.

    ஏமனில் உள்நாட்டுப் போர் 2014 இல் தொடங்கியது. அப்போது ஹவுதிகள் தலைநகர் சனாவையும் வடக்கு யேமனின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர்.  

    • பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்திருந்த பார்ட்னருக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார்.
    • கூடுதல் டோஸ் செலுத்தியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.

    இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.

    ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.

    நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

    மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து இந்த விசயம் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஏமன் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முடிந்த அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

    • உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது.
    • செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது

    இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    "ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், ஹவுதி ஆயுதப் படைகள் செங்கடலில் உள்ள அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் சஹ்யா சாரி கூறினார்.

    முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கப்பல்களைத் தாக்கினர். இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவுதிகள் மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது.

    மே மாதம் அமெரிக்காவும் ஹவுதிகளும் ஓமானின் மத்தியஸ்தத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டினர். இந்த ஒப்பந்தம் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறுகிறது.

    உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையாகும்.

    செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையிலிருந்து சில காலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தினர்.
    • விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது.

    ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனின் சனா விமான நிலையத்தின் மீது இரண்டாவது முறையாக இன்று தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும்  இல்லை.

    கடந்த மே 6 அன்று சனாவில் உள்ள விமான நிலையத்தை இஸ்ரேல் கடைசியாகத் தாக்கியது.

    இதில் விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து மே 17 அன்று சனாவிற்கு சில விமானங்கள் மீண்டும் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    • கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை தாக்கியது.
    • 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.

    ஏமன் தலைநகர் சனாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க விமானத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

    ஏமன் அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சனாவின் ஷூப் மாவட்டத்தில் உள்ள ஃபர்வா சுற்றுப்புற சந்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் கொல்லபட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை அமெரிக்க விமானத் தாக்குதல்கள் தாக்கி குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.

    • ஏமனில் உள்ள ஹவுதி குழுவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது.

    ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

    வான்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை ஹவுதி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.

    கடந்த 2023ஆம் நவம்பர் மாதத்தில் இருந்து 100-க்கும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ×