என் மலர்
நீங்கள் தேடியது "ஹவுதி கிளர்ச்சியாளர்கள்"
- மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.
சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.
டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார்.
காசாவில் இஸ்ரேல் தரைவழியாக பீரங்கிகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை 65,100 ஐ தாண்டியுள்ளது. மக்கள் நகரை விட்டு அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நேற்று, காசாவில் உள்ள மருத்துவமனைகள் அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. காசா நகரில் தரைவழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி 15 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று தெற்கு காசாவின் ரஃபாவில் ஹமாஸ் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேஜர் ஓம்ரி சாய் பென் மோஷே (26), லெப்டினன்ட் எரான் ஷெலெம் (23), லெப்டினன்ட் ஈதன் அவ்னர் பென் இட்ஷாக் (22), மற்றும் லெப்டினன்ட் ரான் அரிலி (20) ஆகியோர் கொல்லப்பட்டனர். நேற்று காலை 9:30 மணிக்கு ஹமாஸ் போராளிகள் அவர்கள் பயணித்த இராணுவ வாகனத்தைத் தாக்கினர்.
இதற்கிடையே இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட் மீது ஹவுத்திகள் நேற்று ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஹோட்டல் தீப்பிடித்தது.
மேலும், மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான ஆலன்பி கிராசிங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜோர்டானிய லாரி ஓட்டுநர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர் இஸ்ரேலியர்கள் மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது
ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் அங்கு 12 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஹவுதிக்களின் ராணுவ கட்டமைப்புடை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள மக்களும் கப்பல்களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது எச்சரிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 10 அன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
- தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
- இந்தப் பகுதிகளில் உள்ள கேபிள்கள், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பால் இயக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே செங்கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டதாக உலகளாவிய இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கேபிள்கள் சேதம் காரணமாக மத்திய கிழக்கு வழியாக நெட்வொர்க் போக்குவரத்து மெதுவாக இருக்கலாம், ஆனால் இது மாற்று வழிகள் மூலம் சரிசெய்யப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் நங்கூரமிட்டதாலோ அல்லது திட்டமிட்ட தாக்குதல் காரணமாகவோ கடலுக்கு அடியில் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் உள்ள கேபிள்கள், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பால் இயக்கப்படுகிறது.
இருப்பினும், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த இடையூறு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
- ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
- டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.
இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது.
இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியது.
- ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டது.
ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.
ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதினர், மற்ற இருவர் 14 வயதினர் என்றும், ஐந்தாவது குழந்தையின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிற போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் முக்கிய களமாக தைஸ் நகரம் இருந்து வருகிறது.
ஏமனில் உள்நாட்டுப் போர் 2014 இல் தொடங்கியது. அப்போது ஹவுதிகள் தலைநகர் சனாவையும் வடக்கு யேமனின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர்.
- உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது.
- செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது
இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
"ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், ஹவுதி ஆயுதப் படைகள் செங்கடலில் உள்ள அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் சஹ்யா சாரி கூறினார்.
முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கப்பல்களைத் தாக்கினர். இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவுதிகள் மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது.
மே மாதம் அமெரிக்காவும் ஹவுதிகளும் ஓமானின் மத்தியஸ்தத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டினர். இந்த ஒப்பந்தம் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறுகிறது.
உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையாகும்.
செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையிலிருந்து சில காலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தினர்.
- விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது.
ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனின் சனா விமான நிலையத்தின் மீது இரண்டாவது முறையாக இன்று தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
கடந்த மே 6 அன்று சனாவில் உள்ள விமான நிலையத்தை இஸ்ரேல் கடைசியாகத் தாக்கியது.
இதில் விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து மே 17 அன்று சனாவிற்கு சில விமானங்கள் மீண்டும் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன.
- கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது.
இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய ஊடக நிறுவனமான ஹயோம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணை தரையிறங்கிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. மேலும் பயணிகள் முனையத்திலிருந்து புகை எழுவதை காட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை தாக்கியது.
- 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க விமானத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சனாவின் ஷூப் மாவட்டத்தில் உள்ள ஃபர்வா சுற்றுப்புற சந்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் கொல்லபட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை அமெரிக்க விமானத் தாக்குதல்கள் தாக்கி குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.






