என் மலர்
நீங்கள் தேடியது "கப்பல்"
- இந்தோனேசியா சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
- உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது.
- செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது
இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
"ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், ஹவுதி ஆயுதப் படைகள் செங்கடலில் உள்ள அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் சஹ்யா சாரி கூறினார்.
முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கப்பல்களைத் தாக்கினர். இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவுதிகள் மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது.
மே மாதம் அமெரிக்காவும் ஹவுதிகளும் ஓமானின் மத்தியஸ்தத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டினர். இந்த ஒப்பந்தம் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறுகிறது.
உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையாகும்.
செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையிலிருந்து சில காலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
- கடலில் மாயமான 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
இலங்கையின் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 9ம் தேதி சென்று கொண்டிருந்தது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சரக்கு கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கன்டெய்னர்களுக்கும் தீ பரவியதால் அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். தகவலறிந்து அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சூரத் மூலம் நடுக்கடலில் தத்தளித்த 18 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது. கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.
- விபத்தில் கப்பலில் இருந்த 19 பேர் காயம் அடைந்தனர்.
நியூயார்க்:
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.
அந்த கடற்படை பாய் மரக் கப்பல் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்றது. அங்குள்ள புரூக்ளின் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. அப்போது கப்பலின் கம்பங்கள், புரூக்ளின் பாலத்தில் மோதியது. பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கப்பலில் இருந்த 19 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக மெக்சிகோ கடற்படை கூறும்போது, பயிற்சி கப்பலான குவாக்டேமோக், புரூக்ளின் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. இதனால் அதன் பயணத்தை தொடர முடியவில்லை. பணியாளர்கள் மற்றும் பொருட்களின் நிலை கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, அமெரிக்காவிற்கான தூதரும் நியூயார்க்கில் உள்ள மெக்சிகோ துணைத் தூதரக அதிகாரிகளும் "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தது. இந்த விபத்தில் 142 ஆண்டுகள் பழமையான புரூக்ளின் பாலத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- குளச்சல் மரைன் போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பொனிப்பாஸ்.இவரது மகன் ஆன்றனி சபில் ராஜ் (வயது 33).
இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ந் தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து இவரது படகு மீன் பிடிக்க சென்றது. கலஸ்டின் (44) என்பவர் படகை ஓட்டினார்.
படகில் வடமாநில தொழி லாளர்கள் 6 பேரும், குமரி மாவட்ட தொழிலாளர்கள் 7 பேரும் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்களது விசைப்படகு முட்டம் கடலில் 34 நாட்டிங் கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கெமிக்கல் டேங்கர் கப்பல், எதிர்பாராத வித மாக படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படகின் முன்பகுதி சேதமடைந்தது.
மேலும் படகில் இருந்த மேற்கு வங்காளம் மீனவர் வினோத் புதிர் (46), வாணியக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (36), பூத்துறையை சேர்ந்த கில்பர்ட் (51) ஆகியோர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றினர். இருப்பினும் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அவர்கள் நேற்று மாலை குளச்சல் துறைமுகம் வந்தனர். உடனடியாக 4 பேரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படகு மீது கப்பல் மோதியது குறித்து மீனவர்கள் புகார் செய்ததன் பேரில் குளச்சல் மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மோதிவிட்டு சென்ற வெளி நாட்டு கப்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் குமரி கடலில் லைபீரியா நாட்டு எண்ணை கப்பல் விசைப் படகு மீது மோதிச் சென்ற நிலை யில் தற்போது மீண்டும் மற்றொரு படகு மீது கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
- பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.
புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.
இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.
- இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.
அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.
- ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர்.
- போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
திருவனந்தபுரம்:
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் தெரிவித்தது.
இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இணைந்து வேட்டையில் இறங்கினர். இதில் பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் நுழையும் கப்பல்களை கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்த கப்பல் ஒன்றை கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் பிரிவினர் இணைந்து விரட்டி சென்றனர்.
சினிமாவில் வருவது போல் நடுக்கடலில் இந்த சேசிங் சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர்.
அந்த கப்பலில் மெத்தாம் பேட்டமைன் எனப்படும் விலை உயர்ந்த போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுசிறு மூட்டைகளில் மொத்தம் 2525 கிலோ போதை பொருள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி எனக்கூறப்படுகிறது.
இந்த போதைபொருளை அதிகாரிகள் கொச்சியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் போதை பொருளை கைப்பற்றி கொச்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த தகவலை கோர்ட்டுக்கும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறும்போது, பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரன் ஹாஜி சலீம் என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவரது குழுவினர்தான் போதை பொருளை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.
தற்போது ஹாஜி சலீம் குழுவை சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மூலம் போதை பொருள் யாருக்காக கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கி உள்ளனர்.
பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதை பொருளை கடத்தி வந்த பிரதான கப்பலை அதிகாரிகள் தாய் கப்பல் என்று குறிப்பிட்டனர். அந்த கப்பலில் இருந்து போதை பொருள் சிறுசிறு பார்சல்களாக பிரிக்கப்பட்டு அவை நடுக்கடலில் சிறிய ரக படகுகளில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு போதை பொருளை ஏற்ற வந்த சிறிய படகுகளில் 3 படகுகள் கடற்படையிடம் சிக்கியதாகவும், 2 படகுகள் தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த படகுகளை தேடிவருவதாக கடற்படை தெரிவித்தது.
இதற்கிடையே போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
அந்த கப்பல் நடுக்கடலில் இருந்து மாயமாகி விட்டதா? அல்லது கடலில் மூழ்கிவிட்டதா? என்பதும் தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, தாய் கப்பல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
- ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
- இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
சேலம்:
இந்திய அரசு பாதுகாப்பு துறையில் உள்ள முப்படை களான ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படு கின்றனர்.
அதன்படி இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
1.365 இடங்கள்
இந்த தேர்வுக்கு திரு மணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,365 இடங்கள் உள்ளன.
கல்வி தகுதி கணிதம், இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் 01.11.2002- 30.04.2006 -க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.06.2023 ஆகும்.
விண்ணப்ப கட்டணம், ஜி.எஸ்.டி., வரி என ரூ.649 செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோ தனை உள்ளிட்ட தேர்வுகள் அடிப்படையில் பணி யமர்த்தப்படுவார்கள்.
இந்த தகவலை இந்திய கப்பல்படை தெரிவித்துள்ளது.
- கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
- விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு விமானங்கள் மூலமே வருகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவதற்கு விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வெளிநாடு வாழ் கேரள மக்கள் அரசிடம் புகார் கூறியிருந்தனர்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் இக்கோரிக்கையை ஏற்று கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி கேரள அரசு ஆலோசித்து வருவதாக மாநில சிறுதுறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார்.
கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒரு பயணிகள் கப்பல் மணிக்கு 35 கிலோ மீட்டர் தூரம் சென்றால் பைபோரில் இருந்து துபாய் சென்றடைய 3½ நாட்கள் ஆகும். இதற்கு கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையே ஆகும்.
இதுவே விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால் கப்பல் பயணத்தில் பயண நேரம் அதிகமானாலும், கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிய முதல் மாநிலம் கேரளா என்ற பெருமையை பெறும்.
- ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்
- இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது
வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இரண்டாம் தாமஸ் ஷோல். ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்.
பிஆர்பி ஸியர்ரா மேட்ரே எனும் பிலிப்பைன்ஸ் நாட்டு போர்கப்பல், இரண்டாம் உலக போரில் பயன்பட்டு வந்தது. இதன் பயன்பாட்டு காலம் முடிவடைந்ததும் அக்கப்பலை பிலிப்பைன்ஸ் இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் நிறுத்தியது. அக்கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு தளமாக பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது.
அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலிப்பைன்ஸ் அக்கப்பலை இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் 1999-ல் நிலைநிறுத்தியது.
தற்போது இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது.
அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் அந்த இடத்தில் வேண்டுமென்றே, சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் அதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருகிறது.
இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது தனது நாட்டு கப்பல் ஒன்றிலிருந்து சீனா நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியது. இதற்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு தெரிவித்து விட்டது.
இப்பிரச்சனையை பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு
- மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில் :
தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பைஜு. இவருக்கு சொந்த மான விசைப்படகில் கடந்த 7-ந்தேதி இரவிபுத்தன் துறை, தூத்தூர் மற்றும் கேரள மாநிலம் விழிஞ்சம், பாண்டிச்சேரி, அசாம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடித்து விட்டு இவர்கள் தேங்காய்பட்டி னம் துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டி ருந்தனர். நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. பின்னர் அந்த கப்பல் நிற்காமல் சென்று விட்டது. கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 12 மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
கடலில் நீந்தியப்படியே உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர். இது குறித்து குமரி மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தலைமையின் பொதுச்செய லாளர் சர்ச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தநிலையில் மீன வர்கள் குடும்பத்தினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், மாலத்தீவில் தவிக்கும் 12 மீனவர்களையும் உடனடி யாக மீட்டு கொண்டு வர வேண்டும். சேதமடைந்த விசை படகிற்கு உரிய நிவாரணமும், மீனவர்க ளுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். விசை படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கப்பல் மீது அரசு உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






