search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்- 300 பேர் பயணிக்கும் வகையில் ஏற்பாடு
    X

    புதுவையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்- 300 பேர் பயணிக்கும் வகையில் ஏற்பாடு

    • கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
    • பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.

    புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×