என் மலர்
நீங்கள் தேடியது "kerala"
- டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
- மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார்.
- இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.
கேரள மாநிலம் கோயிலாண்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் கனத்தில் ஜமீலா.
கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார். அவருக்கு வயது 59.
கோழிக்கோடு குட்டியாடி பகுதியை சேர்ந்த இவர் பஞ்சாயத்து தலைவர், ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
இவரது இறுதிச்டங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.
- தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
- எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.
கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.
போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.
இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.
கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
- முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
- பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?
முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அதில், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, "பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்?
காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுள்ளது?
காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று தெரிவித்தார்.
- டிசம்பர் 9 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, நேற்று மனுக்கள் மீதான ஆய்வு நடைபெற்றது. இதில் 1.55 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர்கள் 82020 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 72524 மனுக்கள் ஏற்கபப்ட்டுள்ளது. மூன்று திருநங்கைகள் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. 2479 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் 1354 பெண்கள், 1125 ஆண்கள் மனுக்களாகும்.
மொத்தமாக 1,07,211 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் 56,501 பெண்கள், 50,709 ஆண்கள் ஆவார்கள். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதனால் நாளை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன்பின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.
941 கிராம பஞ்சாயத்தில் உள்ள 17,337 வார்டுகளுக்கும், 125 பிளாக் பஞ்சாயத்தில் உள்ள 2,267 வார்டுகளுக்கும், 14 மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 346 வார்டுகளுக்கும், 86 நகராட்சியில் உள்ள 3,205 வார்டுகளுக்கும், 6 மாநராட்சியில் உள 421 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பையன்னூர் அருகே ஏவுனுக்கு கண்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் தொடங்கிய நிலையில் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அனீஸ் ராஜ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே நேற்று முன்தினத்துக்குள் அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும் என்று அனீஸ் ஜார்ஜூக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் கொடுத்த கால அவகாசத்துக்குள் அவரால் 200 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனீஸ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தனது மகன் நள்ளிரவு 2 மணி வரை வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அதீத பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஜார்ஜ்ஜின் தந்தை தெரிவித்தார். இந்த ச,சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாநில தேர்தல் ஆணையர் விளக்கம் கேட்டுள்ளார்.
- சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்," சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது, நீர் நிலையங்களில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பகல் இரவாக பணி பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
- மனஅழுத்தம் காரணமாக அலுவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், புறக்கணிக்கும் முடிவு.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு பணி ஊழியர்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் படிவம் வினியோகம் செய்து, அது நிரப்பப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
சரியாக ஒரு மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்பதால் பகல் இரவாக பணியில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்ணூர் பய்யனூரைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் அனீஷ் ஜார்ஜ் (44) SIR பணியால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல் மன்றம், ஆசிரியர் சேவை அமைப்புகளின் கூட்டுக் குழு மற்றும் கேரள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சங்கம் நாளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த SIR பணியால் வாக்குசாவடி அளவிலான அதிகாரிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
- சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.
- இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது55). இவரது மகன் அகில்(26). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து அகில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் தீயசக்திகள் புகுந்துவிட்டதாக அகிலின் குடும்பத்தினர் கருதினர். ஆகவே அவர்கள் பத்தினம்திட்டா பெரும்துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை நாடினர்.
அப்போது அவர் இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாந்திரீக பூஜை செய்வதற்கான எற்பாடுகளை அகிலின் குடும்பத்தினர் செய்தனர். பின்பு அவர்களது வீட்டுக்கு வந்த மந்திரவாதி சிவதாஸ் மாந்திரீக பூஜை செய்தார்.
இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமரவைத்து தொடர்ந்து 10 மணி நேரம் பூஜை செய்துள்ளார். அந்த பூஜையின் போது இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்க செய்துள்ளனர். மேலும் பீடி சாம்பலை விழுங்கச் செய்திருக்கின்றனர்.
அது மட்டுமின்றி இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்தநிலையில் இளம்பெண்ணை பார்க்க அவரது தந்தை வந்துள்ளார். அவரிடம் தன்னை கணவர் குடும்பத்தினர் மாந்திரீக பூஜை என்ற பெயரில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்தார்.
அவர் அதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணின் கணவர் அகில், மாமனார் தாஸ், மந்திரவாதி சிவதாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
- தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்துகள் தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக-கேரள அதிகாரிகள் பேசி பொதுப் போக்குவரத்து பிரச்சனைக்கு முடிவெடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவிற்குள் சென்றால் தங்களது பேருந்து பறிமுதல் செய்யப்படலாம் என அச்சம் காரணமாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரள போக்குவரத்து துறையால் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது
- பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகரும் கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவருமான பிரகாஷ்ராஜ்
2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார்.
பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவர் பிரகாஷ்ராஜ், "பிரம்மயுகம் படத்தில் மம்முட்டி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளம் நடிகர்கள் அவரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் ஏன் தரப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ், "இது தொண்டு நிறுவனம் கிடையாது. நாம் திறமையான நடிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு விருது அளிக்கிறோம். ஆனால் FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே நமக்குத் தெரிகிறது, அவை நடுநிலையுடன் அறிவிக்கப் படுவதில்லை. மம்முட்டிக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.






