என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the kerala story"

    • விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
    • வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.


    மத தீவிரமயமாக்கலை சித்தரிப்பது போன்று வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக 'தி கேரளா ஸ்டோரி 2' தயாரிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்ககூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

    இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் நேற்று மூத்த வக்கீல் ஸ்ரீகுமார் ஆஜராகி, படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

    இதனை கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாகவும், இந்த வாதங்கள் முடியும் வரை வெளியீட்டை ஒத்திவைக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அப்போது வக்கீல் ஸ்ரீகுமார் 2 நிமிட டீசரை மட்டும் வைத்து நிவாரணங்களை வழங்க முடியாது என்று வாதிட்டார்.

    படம் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்து உள்ளது என்றும், மத்திய திரைப்பட வாரியம் அதைச் சான்றளித்தவுடன், ஐகோர்ட்டு அதன் சொந்தக் கருத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வாதிட்டார். டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனுதாரர்கள் "கேரள மக்களின் கூட்டு கண்ணியத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

    இருப்பினும் படத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • மாட்டிறைச்சியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
    • பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது

    சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.  

    கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

    வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும்,  இந்துப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் 'பீப்-பரோட்டா' என்பது அனைத்து மதத்தினரிடையேயும் பிரபலமானது. அங்கு யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சமூக ஊடகங்களில் கேரள மக்கள் இந்தப் படத்தின் காட்சியை விமர்சித்து வருகின்றனர்.

    கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" (யாருடனும் எங்களுக்குப் பகை இல்லை) என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.

    சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

    திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.

    கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று கூறியுள்ளார்.

    மேலும், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

    கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

    கேரளாவின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் மீது இந்தப் படம் தாக்குதல் நடத்துவதாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர். 

    இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

    பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.

    கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

    வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று வெளியானது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

    முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த கண்டித்து வருகின்றனர்.

    ஜன நாயகன் போன்ற மற்ற படங்களை நிராகிரிக்கும் தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு மட்டும் முந்திக்கொண்டு சான்றிதழ் கொடுக்கும் என்றும் தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.

    வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

    நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

    வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.

    குறிப்பாக லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். ஆகவே இதன் காரணமாக தான் பிரித்விராஜ் நாயகனாக நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    அதே சமயம் 2023 டிசம்பர் 31க்குள் தணிக்கை முடிந்த படங்கள் மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும். ஆனால் ஆடுஜீவிதம்' திரைப்படம் 2024 இது பிப்ரவரி 1 அன்று தணிக்கை சான்றிதழ் பெற்றது. எனவே, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் 72வது தேசிய விருதுகளில் ஆடுஜீவிதம்' திரைப்படம் விருதை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டது.
    • இதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக '12த் ஃபெயில்' மற்றும் சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது, சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

    வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது. 

    • சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் மலையாள திரையுலகில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் 'சார்லி சாப்ளின் -2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    தி கேரளா ஸ்டோரி

    இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது.

    மேலும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

    • டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும்.
    • இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 'தி கேரள ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தி கேரள ஸ்டோரி படத்தின் டிரெய்லர் என்பது மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத பயங்கரவாதத்தின் மையமாக நிலை நிறுத்தி கொள்ளும் வகையில் சங்க்பரிவார் பிரசாரமாக உள்ளது. போலியான கதைகள், திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலை அவர்கள் பரப்ப முயற்சிக்கிறார்கள். எந்தவித உண்மையும், ஆதாரமும் இன்றி இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். படத்தின் டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும். இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும்.

    கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்க்பரிவார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்தின் முன், இது போன்ற பிரசார படங்களும், அதில் சித்தரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மதத்தினரை அந்நியப்படுத்துவதும், கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் சங்க்பரிவார் முயற்சிகளின் பின்னணியாக உள்ளது. விஷ விதைகளை விதைத்து மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    • கேரள மாநிலத்தில் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.

    இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அந்த படத்தை திரையிடாமல் இருந்தால் நல்லது. இந்த படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் மனுவும் அளித்து உள்ளனர். இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே வருகிற 5-ந்தேதி படம் வெளியாகிறதா என்பது பற்றி திரைத்துறையினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். அதே நேரத்தில் மற்ற மொழிகளில் படம் வெளியாவதை பார்த்து எந்த மாதிரி சூழல் நிலவுகிறது என்பதையும் பார்த்து பின்னர் முடிவு எடுக்கலாம்.

    இவ்வாறு உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

    இதற்கிடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட யாரும் இதுவரை முன்வரவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் படத்தை தயாரிப்பாளரே வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த படத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான திரைப்படங்கள் பொய்யையும், அவதூறையும் கலந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மத மோதலை உருவாக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க கோரி எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
    • இப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


    தி கேரளா ஸ்டோரிக்கு கிளம்பிய எதிர்ப்பு

    தி கேரளா ஸ்டோரிக்கு கிளம்பிய எதிர்ப்பு

    அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதிக்கக் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதின்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

    • படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தமிழக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்துள்ளனர்.
    • முஸ்லிம் அமைப்பினரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்பட 5 மொழிகளில் நாளை வெளியாகிரது. இந்த படத்துக்கு கேரள மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ். அமைப்பில் சேருவது போன்று படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்களுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தமிழக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்துள்ளனர். அதில் தமிழக தியேட்டர்களில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம் அமைப்பினரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த படத்தை யாரும் வாங்கி வெளியிட முன்வரவில்லை. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். அப்படி அவர் படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்படுமா என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப செயலாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டர்கள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.
    • இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    சென்னை :

    இந்தி இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கத்தில் இன்று வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்ட 'டீசர்' சமீபத்தில் வெளியானது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் வலுத்தது.

    தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

    இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

    * இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    * பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

    * சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×