என் மலர்
நீங்கள் தேடியது "prithviraj"
- இந்து அமைப்புகள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்தார் பிருத்விராஜ்.
- ஜெயன் நம்பியார் இயக்கிய பிருத்விராஜின் சமீபத்திய திரைப்படமான 'விலாயத் புத்தா' நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது.
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழ்பவர் பிருத்விராஜ். மலையாளம், தமிழ் படங்களில் கதாநாயக வளம் வரும் பிருத்விராஜ் கடந்த 2019 இல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குனரான பரிமளித்தார் பிருத்விராஜ். இப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் 2 ஆம் பாகமான எம்புரான் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை காட்சிப்படுத்தியதால் இந்து அமைப்புகள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்தார் பிருத்விராஜ்.
இந்நிலையில் ஒரு நடிகராக தனது மகனை திரைப்படத் துறையிலிருந்து அழிக்க சிலர் பெரிய சதித்திட்டம் தீட்டி வருவதாக பிருத்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் கவலை தெரிவித்துள்ளார்.
மலையாள ஊடகங்களுக்கு மல்லிகா சுகுமாரன் அளித்த பேட்டியில் "பிருத்விராஜை குறிவைத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இது அவரை சினிமா தொழிலில் இருந்து நீக்க திட்டமிட்ட முயற்சி" என்று கூறினார்.
ஜெயன் நம்பியார் இயக்கிய பிருத்விராஜின் சமீபத்திய திரைப்படமான 'விலாயத் புத்தா' நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது.
இந்தப் படம் வெளியானதிலிருந்து ஒரு குழு தனது மகனை வேண்டுமென்றே குறிவைத்து வருவதாகவும் அவர்கள் பிருத்விராஜை தொழில் ரீதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
பிரபல மலையாள நாவலை தழுவி சந்தன மரகடத்தல் பற்றிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட 'விலாயத் புத்தா' எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
விலாயத் புத்தா படத்தின் காட்சிகளை தவறாக சித்தரித்ததாகவும், வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் நோக்கில் அவற்றை திரித்து கூறியதாகவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் ஒரு யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
- இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
- முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்தார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள 'விலாயத் புத்தா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய 'விலாயத் புத்தா' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டை கடத்தலை மையமாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.
முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்த பிருத்விராஜ் மீண்டும் நாவலை தழுவிய படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.
கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.
கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது வெளியாகியுள்ள 'பாம்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிஎஸ்கே. 'லப்பர் பந்து' படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் 'பாம்' படத்தில் நடித்தது குறித்தும் அடுத்தடுத்து வரவிருக்கும் தனது படங்கள் குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொண்டார் டிஎஸ்கே..
"லப்பர் பந்து படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். 'பாம்' படத்தில் அப்படியே முற்றிலும் மாறான பாசிட்டிவான கதாபாத்திரம். ஆனாலும் இந்த படத்திற்கான கதாபாத்திரம் எனக்கு லப்பர் பந்து படத்திற்கு முன்பாகவே தேடி வந்த ஒன்று.. 'பாம்' படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை பார்த்து வியந்துபோய் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினேன். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
ஆனால் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து பாம் படத்தின் கதாபாத்திரம் குறித்து சொல்லி இதில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என்று சொன்னது மட்டுமல்ல, இந்த கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னபோது என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆச்சரியப்பட வைத்தது. அவரும் என்னைப் போல அடிப்படையில் ஒரு மிமிக்ரி கலைஞர் தான் என்பதால் மறக்காமல் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார். படம் பார்த்த பலரும் லப்பர் பந்து, பாம் இரண்டு படங்களுக்கும் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறீர்கள், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நீங்கள் அதில் பொருந்தி விடுவீர்கள் என பாராட்டியபோது இயக்குநர் விஷால் வெங்கட்டின் நம்பிக்கையை காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டது.
லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக தேடி வந்தது. அங்கே 'விலாயத் புத்தா' என்கிற படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன்..
படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியதுடன் மலையாள திரையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார் பிரித்விராஜ். அது மட்டுமல்ல இயக்குநரிடம் என்னைப் பற்றி பேசும்போது 'ஈ ஆள் வலிய வேலைக்காரன்' என்றும் பாராட்டியுள்ளார். என்னடா வேலைக்காரன் என்று சொல்கிறாரே என நான் குழம்பியபோது, படத்தின் இயக்குநர் அவர் உங்கள் நடிப்பு திறமையை பாராட்டி தான் அப்படி கூறினார் என்று சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.
தமிழில் அமீர், அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில், மீண்டும் லப்பர் பந்து படத்தில் நடித்தது போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். செல்வகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ஜனவரியில் வெளியாக இருக்கிறது.
இது தவிர டியர் ஜீவா, ஹி இஸ் பிரக்னண்ட் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். கனா, லேபிள், அடங்காதே உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக பணியாற்றிய' பிரகாஷ் பாஸ்கர் டியர் ஜீவா படத்தை இயக்குகிறார்.
ஹி இஸ் பிரக்னண்ட் ஒரு பேண்டஸி படமாக உருவாகிறது. தற்போது பாலாஜி சக்திவேல் சாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது என்னுடைய 25வது படமாக உருவாகி வருகிறது. அந்தவகையில் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் குணசசித்திர கதாபாத்திரம் பண்ணுகின்ற நடிகர்கள், அதிலும் 35 வயதுக்கு உட்பட்ட நடிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கான தேவையும் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை எனக்கென நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் நான் தீவிரமாக இருக்கிறேன். தற்போது எனக்கு வருகின்ற படங்களும் கதாபாத்திரங்களும் அதை வலுப்படுத்தும் விதமாகவே தேடி வருவது கூடுதல் சந்தோஷம்" என்கிறார் டிஎஸ்கே..
- விலாயத் புத்தா தமிழ் டீசரில், 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
- மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்ட்டது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள 'விலாயாத் புத்தா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய 'விலயாத் புத்தா' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டை கடத்தலை மையமாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.
விலாயத் புத்தா தமிழ் டீசரில், 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' என்ற வசனங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
- கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.
குறிப்பாக லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். ஆகவே இதன் காரணமாக தான் பிரித்விராஜ் நாயகனாக நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் 2023 டிசம்பர் 31க்குள் தணிக்கை முடிந்த படங்கள் மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும். ஆனால் ஆடுஜீவிதம்' திரைப்படம் 2024 இது பிப்ரவரி 1 அன்று தணிக்கை சான்றிதழ் பெற்றது. எனவே, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் 72வது தேசிய விருதுகளில் ஆடுஜீவிதம்' திரைப்படம் விருதை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
- சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது
2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார். ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கும் தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருது மம்முட்டியின் 'காதல் - தி கோர்' படத்திற்கு வழங்கப்பட்டது.
- முதல் பாகத்தை போலவே லூசிபர் இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.
- 'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்தது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.
'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம்அறிவித்தது.
இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.
இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தது.
இந்நிலையில் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது
- படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் 'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.
இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.
- கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- எம்புரான் படத்தில் பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் வெளியானது.
'எம்புரான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில், நடிகரும் எம்புரான் திரைப்பட இயக்குநருமான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் அப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.
எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பணம் பெறப்பட்டது பற்றியும் கடுவா, ஜன கண மன மற்றும் கோல்ட் படங்களின் ஊதியம் குறித்தும் அவரிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






