search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahesh Babu"

    • மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிரித்விராஜ்
    • இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிரித்விராஜ் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரம்மிக்கும் அளவு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பிரித்விராஜ். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் ராஜமவுலி இயக்கும் SSMB29 படத்தில் வில்லனாக நடிக்க பிரித்விராஜ் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இதில் நாயகனாக மகேஷ்பாபு நடிக்கிறார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

    மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரித்விராஜ் நடிக்க இருப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார்.
    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர்.

    இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

    நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார். பின் யாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிரது என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறேன் என்ரு பதிலளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது
    • ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் 3வது இடத்தில உள்ளது.

    இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் எடுத்து ஹைதராபாத் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

    இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சந்தித்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஹைதராபாத் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’.
    • இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது.

    இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டூர் காரம்'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    'குண்டூர் காரம்' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி குடித்தது சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "குண்டூர் காரம் திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி.


    முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.

    • இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.
    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.


    மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.



    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.



    'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதனை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.



    இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதனை வெளியிடவுள்ள பிரபலம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

    • மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'எஸ்எஸ்எம்பி29'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த வெளியாகியுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.


    ராஜமவுலி - மகேஷ் பாபு

    ராஜமவுலி - மகேஷ் பாபு

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    மகேஷ் பாபு

    மகேஷ் பாபு

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.
    • இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.


    மகேஷ் பாபு - ராஜமவுலி

    மகேஷ் பாபு - ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


    ராஜமவுலி - மகேஷ் பாபு

    ராஜமவுலி - மகேஷ் பாபு

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படம் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) தயாரிக்கிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.


    எஸ்எஸ்எம்பி28

    எஸ்எஸ்எம்பி28

    குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்த என்டர்டெய்னர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13, 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன்பின், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, விக்ரம் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி, கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'விக்ரம்' படத்திலும், சீனுராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்திலும் நடித்துள்ளார். 'மாமனிதன்' திரைப்படம் வருகிற ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி தற்போது தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கைவசம் 'விடுதலை', 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'காந்தி டாக்ஸ்', ’மும்பைக்கர்’ உள்ளிட்ட படங்கள் உள்ளது.

    மகேஷ் பாபு - விஜய் சேதுபதி
    மகேஷ் பாபு - விஜய் சேதுபதி
     
    இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு அடுத்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும்  படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்ததை தொடர்ந்து மகேஷ் பாபு படத்தில் நடிக்க இருப்பதை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதற்குமுன் 2020-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×