என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema"

    • மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.
    • நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார்.

    தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.இவர் நடித்து கொடுத்த பில்டர்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்றியுள்ளதாக சில வாரங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்ததால் மகேஷ் பாபுவிறுகு அமலாக்கத்துறை சம்மனை அனுப்பியது.

    விளம்பர படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார். இதில் ரூ.2.50 கோடி ரொக்கமாகவும், மீதம் உள்ள பணம் வங்கிக் கணக்கில் பெறப்பட்டது.

    பணம் பெற்றது சம்பந்தமாக நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என மகேஷ்பாபு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டைவனையின்படி சினிமா படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது. விசாரணைக்கு ஆஜராக வேறு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    • கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
    • கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’.

    கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் தவறாக அணுகிய தாக நடிகை வின்சி புகார் கொடுத்தார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இயக்குநர்களுடன் இருந்த 3-வது நபர் ஷாகித் முகமது.இவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக கலால் துறை அதிகாரி ஓருவர் கூறுகையில், கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனைக்கு சென்றோம். அங்கிருந்த 3 பேரிடம் இருந்து கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.

    அவர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    இயக்குநர் காலித் ரகு மான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
    • இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டி வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    அதனைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் கடும் புயலை கிளப்பியிருக்கிறது.

    நடிகைகள் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. தங்களின் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கேட்டு முகேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருந்தது.

    அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.கே.பிரகாஷூக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

    இதேபோன்று நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோரும் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

    ×