ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் பெயர் இதுவா? - வெளியான தகவல்

காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் உருவாகி வருகிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் பெயர் இதுவா? - வெளியான தகவல்
Published on

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் தற்போது SSMB29 என்று அழைக்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாரணாசி அல்லது ஜெனெரேஷன் 63 (Gen 63) என இப்படத்திற்கு பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com