என் மலர்
நீங்கள் தேடியது "release"
- 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
- மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.
விருதுநகர்
தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.
- தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரை இருக்கும் என ஆய்வு முடிவின்படி அறியப்பட்டு உள்ளது.
- கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை,
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22ல் தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது.
தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி ராயகோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம், சாவடி, உடுமலை, தாராபுரம் மற்றும் கர்நாட மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து வருகிறது.
மேலும் வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்ததி செய்யப்பட்டுகிறது. வர்த்தக மூலங்களின்படி கோவை சந்தைக்கு தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றது.
இதேபோல வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) வெண்டைக்காய் 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்ப்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வர்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு வெண்டைக்காய மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
பொருளாதார ஆய்வு முடிவின்படி அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையும், நல்ல தரமான கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.27 ஆகவும், வெண்டைக்காயின் விலை ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் என அறியப்பட்டு உள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவுகளை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.
- திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து ஆய்வு.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அரசு செயலாளர் ஆபிரகாம் பேசும்போது,
தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.
நாளை முதல் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள தொடர் திருத்த முறையில் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அடுத்து வரும் 4 காலாண்டுகளின் மைய தகுதி நாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தொடர்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அந்தந்த வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவங்கள் வழங்கலாம்.
அல்லது NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், வல்லம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சை), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), பூர்ணிமா (கும்பகோணம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக விசை படகை, அரசுடமையாக்கி இலங்கை நீதிபதி உத்தரவு.
- விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்.
கொழும்பு:
நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த 17-ந் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களது படகை அரசுடமையாக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
- வாகன மேற்கூரையில் பயணம் செய்ததாக உசிலம்பட்டியில் கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
உசிலம்பட்டி
பசும்பொன் முத்துரா மலிங்க தேவரின் 115-வது குரு பூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடு களுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தேனியில் இருந்து உசிலம்பட்டி வழியாக பசும்பொன்னிற்கு செல்வ தற்காக டெம்போ வேனின் மேல் பகுதியில் நின்றவாறு வாகனத்தில் வந்தவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி வேனின் மேற்கூரையில் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் கீழே இறங்க முடியாது என்று கூறியதுடன், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தேனியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, அருண்குமார், அஜித்குமார், பிரேம், ராஜேஷ் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை நீதிபதி சத்தியராஜ் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
- இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது.
- சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
சேலம்:
இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இதையடுத்து கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் கணினி வழியாக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளன.
பதிவு எண், பாஸ்வேர்டு கொடுத்து தாங்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் என்.டி.ஏ. வழங்கியுள்ள கேள்விக்குரிய விடைகள் ஆகியவற்றை பார்வை யிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்து க்கொள்ளலாம். அவை நாளை வரை கிடைக்கும்.
விடைக்கு றிப்பில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் அதையே சவால் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து, கட்டணமாக ஒரு கேள்விக்குரிய விடைக்கு ரூ.200- செலுத்த வேண்டும். தேர்வர்களால் செய்யப்படும் சவால்கள், பாட நிபுணர்கள் குழுவால் சரிபார்க்கப்படும். சரியானவை என கண்டறியப்பட்டதால் விடைகள் அதற்கேற்ப திருத்தப்படும்.
திருத்தப்பட்ட இறுதி விடை குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
கடலூர்:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மத்திய சிறைச்சாலை உள்ள 10 கைதிகள் நன்னடத்தை காரணமாக இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து 10 பேரின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியுடன் வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் காலை நன்னடத்தை காரணமாக 10 நபர்கள் வெளியில் வந்தனர். அப்போது அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து நன்னடத்தை வெளியில் வந்த நபர்களுக்கு மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.
இதனை தொடர்ந்து நன்னடத்தை காரணமாக வெளியில் வந்த நபர்கள் இனி வருங்காலங்களில் சரியான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி எந்தவிதமான குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் அறிவுறுத்தினார்.
- நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
- இதில் சேலம் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்த கைதிகள் 15 பேரை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் சேலம் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிய 7 மாதங்களுக்கு முன்பாகவே நேற்று விடுதலையானார்.
இதேபோல் வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்தவர் உசேன் முகமது (39). இவர் வழிப்பறி வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். நன்ன டத்தையால் ஓராண்டுக்கு முன்பாக, நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
பழனி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.
இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தபால் அட்டையில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி பழனி தலைமை தபால் அலுவலகம் முன்புள்ள பெட்டியில் போட்டனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழக கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது என்றார்.
இதேபோல தேனியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.