என் மலர்
நீங்கள் தேடியது "With Love"
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
- ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள 'அய்யோ காதலே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.






