என் மலர்
நீங்கள் தேடியது "ரிலீஸ்"
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
- படம் மே 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இப்படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் ஸ்ரீமுகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் கோடை விடுமுறையில், மே.15ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காண்பிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. மேலும் ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் நடித்து முடித்துள்ள படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார். கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காண்பிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.
- நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார்.
- படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.
'நம்மல்' திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி' படத்தில் அவர் புது கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார்.
வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை அமைந்துள்ளார். படத்தில் பாவனா, 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவரது நடிப்பு முக்கிய களமாக இருக்கும்.

மேலும் நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார் மற்றும் மன்சூத் டி.பி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ளிட்ஸ்கெர்க் ஃபிலிம்ஸ் (Blitzkrieg Films), ஏபிகே சினிமா (APK Cinema) மற்றும் நடிகை பாவனாவின் சொந்த நிறுவனமான பாவனா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மர்மம், உணர்ச்சி, மற்றும் புத்திசாலித்தனமான விசாரணை ஆகியவற்றின் சங்கமமாக, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- பிருத்விராஜ் சுகுமாரன், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
- தமிழ் புத்தாண்டு மற்றும் உகாதி பண்டிகை காலத்தை ஒட்டி வெளியாகிறது
இயக்குநர் ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் உகாதி பண்டிகை காலத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.
- இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
- உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லாக் டவுன்'. அனுபமா பரமேஸ்வரனுடன் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு, தற்போது ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மை டியர் சிஸ்டர். இவர்களுடன் அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அக்கா-தம்பி பாசத்தை மையக்கருவாக கொண்டு படம் உருவாகி உள்ளது. 'என்னங்க சார் உங்க சட்டம்' புகழ் பிரபு ஜெயராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என பொங்கலை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
- இதன் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.
ஒரே படத்தில் வெவ்வேறு கதைகள் இடம் பெறக் கூடிய 'ஆந்தாலஜி' வகைப் படங்களில் ஒன்று ஹாட்ஸ்பாட். கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. 'ஹாட்ஸ்பாட் 2' மச் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லரின் படி இரண்டாம் பாகமும், முதல் பாகத்தை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜன.23ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- படத்தில் 23 காட்சிகளை நீக்க தணிக்கை குழு பரிந்துரை
- மறுசீராய்வுக் குழுவை அணுகிய சுதா கொங்கரா
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு மீண்டும் போஸ்டரை வெளியிட்டு படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் படம் ஜன.10-ல் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
- ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
- டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின்மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது வித் லவ் படம்மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
- தியேட்டர்களில் கட் அவுட் வைக்க அனுமதி மறுப்பு
- ரசிகர்கள் ஏமாற்றம்
நாகர்கோவில்:
பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.
இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் அஜித் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதே போல் அஜித் நடித்த துணிவு படமும் 2 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு கட் அவுட்கள் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 2 ரசிகர்களும் கட் அவுட்டு கள் வைக்க போலீசாரின் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டனர்.அவர்களும் தியேட்டருக்கு வெளியே கட் அவுட் வைக்க அனுமதி மறுத்துள்ளனர்.
தியேட்டருக்குள் கட் அவுட் வைத்தால் அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தியேட்டர் நிர்வாகமே முழு பொறுப்பு என்று தெரிவித்தனர். இத னால் தியேட்டர் உரிமை யாளர்களும் கட்அவுட் வைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. வழக்கமாக புதிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் வெளியே கட்அவுட்டுகள் வைப்பது வழக்கமாகும். ஆனால் தற்பொழுது கட்அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் விஜய் நடித்த வாரிசு படம் நாளை 11-ந்தேதி அதிகாலை 6.00 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல் அஜித் நடித்த வாரிசு படம் நாளை காலை 7.30 மணிக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2 படத்திற் கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாகர்கோவிலை தவிர்த்து வெள்ளிச்சந்தை, குழித்துறை பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் விஜய் அஜித் படங்கள் வெளியிடப்படுகிறது.
- இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
- ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.
மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
- இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.
'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.
இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா,வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தும் வெற்றி பெற்றார்.மேலும் 'விடுதலை' படத்தில் ஹிட் ஆனது. கடும் உடற்பயிற்சி செய்து 'சிக்ஸ் பேக்' உடலில் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறியதாவது :-
விடுதலை- 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
'விடுதலை- 2' படத்திற்கு முன்னதாக 'கருடன்' படம் ரிலீஸ் ஆகி விடும். விடுதலை- 2 படம் போலவே 'கருடன்' படமும் ஒரு நல்ல படமாகும். இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.
தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்க வில்லை.படம் நடிப்பில் நான் 'பிஸி' ஆக இருக்கிறேன்''.என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






